சினிமா செய்திகள்

ரஜினியின் சம்பளம் புதிய உச்சம் – திரையுலகம் அதிர்ச்சி

ரஜினிகாந்த் இப்போது தர்பார் படத்தில் நடித்திருக்கிறார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியிருக்கும் அந்தப்படம் 2020 ஆம் ஆண்டு பொங்கல் நாளில் வெளியாகவிருப்பதாகச் சொல்லப்பட்டிருக்கிறது.

தர்பார் ரஜினியின் 167 ஆவது படம் என்கிறார்கள். இந்நிலையில் ரஜினியின் 168 ஆவது படம் குறித்த அறிவிப்பு அக்டோபர் 11 அன்று வெளியானது.

அதன்படி, ரஜினியின் 168 ஆவது படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. 

கார்த்தி நடித்த சிறுத்தை மற்றும் அஜீத்தை வைத்து வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் ஆகிய படங்களை இயக்கிய சிவா இயக்குகிறார்.

இந்தப்படத்துக்காக ரஜினி வாங்கும் சம்பளம் பற்றிய தகவல் கசிந்துள்ளது. 

இப்படத்துக்காக ரஜினிக்கு, ஜிஎஸ்டி வரி உட்பட நூறு கோடி ரூபாய் கொடுக்கப்படவிருப்பதாகச் சொல்லப்படுகிறது.
 
இது உண்மையென்றால், தமிழ்த்திரையுலகத்தில் முதன்முதலில் நூறு கோடி சம்பளம் பெறும் நடிகர் என்கிற பெருமையை அவர் பெறுவார்.

ரஜினியின் சம்பளம் குறித்து அறிந்தவர்கள் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள். அதோடு, ரஜினி போன்ற மூத்த நடிகர் படத்துக்குப் படம் சம்பளத்தை உயர்த்திக் கொண்டே போவது திரையுலகுக்கு நல்லதல்ல என்றும் இது மோசமான முன்னுதாரணம் ஆகும் என்றும் சொல்கிறார்கள்.

Related Posts