சினிமா செய்திகள்

காலாவை சுற்றும் 4 சிக்கல்கள், ஜூன் 7 இல் வெளியாகாது?

பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்திருக்கும் காலா படம் ஜூன் 7 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

ஆனால் திட்டமிட்டபடி வெளியாவது சந்தேகம்தான் என்கிறார்கள்.

ஏன்?

கேரளாவில் படத்தை வெளியிடவிருக்கும் விநியோகஸ்தர் தரப்பு, ரம்ஜான் நோன்பு உச்சத்திலிருக்கும் நேரத்தில் படத்தை வெளியிட்டால் வசூலில் பாதிப்பு ஏற்படும் எனவே ரம்ஜான் நாளில் படத்தை வெளியிட்டால் நல்லது என்று வலியறுத்துகிறதாம்.

ஆந்திராவில் 2 ஓ படத்துக்கு முன்பணமாகப் பெரும்தொகை கொடுத்திருப்பவர், அந்தப்படம் தள்ளிப்போவதால் எனக்கு பெரிய நட்டம், எனவே நான் கொடுத்த பணத்தை திருப்பிக் கொடுத்துவிட்டு இந்தப்படத்த வெளியிடுங்கள் என்று லைகா நிறுவனத்துக்கு நெருக்கடி கொடுக்கிறார்களாம்.

கர்நாடகாவில் கன்னட இனவெறி அமைப்பு ஒன்று, காவிரிச் சிக்கலைக் காரணம் காட்டி, இந்தப்படம் சிக்கலில்லாமல் வெளியாகவேண்டுமென்றால், எங்களுக்கு இவ்வளவு பணம் தர வேண்டும் என்று சொல்லி பெரும்தொகை கேட்கிறதாம்.

இவை அனைத்தையும்விட ஜுராசிக் வேர்ல்டு ஆங்கிலப்படம் அதே தேதியில் வெளியாகிறது.

காலா படத்துக்குப் பெரும்தொகை கொடுத்தால்தான் பெட்டி தருவார்கள், அதில் ரிஸ்க் இருக்கிறது. அதேசமயம் ஆங்கிலப்படத்தை பணம் கொடுக்காமலே திரையிடும் வாய்ப்பு இருக்கிறது என்பதால் திரையரங்குக்கார்ர்கள் காலாவை திரையிடத் தயக்கம் காட்டுகிறார்களாம்.

இவற்றையெல்லாம் சரி செய்து படத்தை வெளியிடும் சாத்தியம் மிகக் குறைவு என்றும் சொல்லப்படுகிறது.

இந்தக் காரணங்களால் காலா திட்டமிட்டபடி வெளியாகாது என்று கூறுகிறார்கள்.

Related Posts