நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் கொரோனா பாதிப்பால் நேற்று மாலை 7 மணிக்கு இறைவனடி சேர்ந்தார். அவருக்கு வயது 48 . மார்ச் மாதம் இறுதியில் அவருக்கு கொரோனா பாதிப்பால் தொடர்ந்து உடல் நிலை மோசமடைந்தது . அதனால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பிறகு தொடர்ந்து சிகிச்சை
சினிமா
நடிகர் அரவிந்த்சாமி நடிப்பில், நரகாசூரன், கள்ளபார்ட், சதுரங்கவேட்டை 2, வணங்காமுடி ஆகிய படங்கள் தயாராகி வெளிவராமல் இருக்கின்றன. இதனால் அவரை வைத்துப் புதிய படங்கள் எடுக்கத் திரைத்துறையினர் தயங்குகின்றனர். ஆனால், இணையதளத் தொடர்களில் அவருக்கு இடம் கிடைத்துக்கொண்டே இருக்கிறது. இப்போதும் ஓர் இணையதளத் தொடரில் அவர் நடிக்கவிருக்கிறாராம். அத்தொடரில் அவர், முன்னாள் தமிழ்த்திரையுலக
விக்ரம் நடிப்பில் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் ‘கோப்ரா’. இப்படத்தில் ‘கே.ஜி.எஃப்‘ நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி, கே.எஸ்.ரவிகுமார், கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான், மியா ஜார்ஜ், கனிகா, மிருணாளினி, ஜான் விஜய் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ‘டிமான்டி காலனி‘, ‘இமைக்கா நொடிகள்‘ ஆகிய படங்களைக் கொடுத்த அஜய் ஞானமுத்து இப்படத்தை இயக்கிவருகிறார். சஸ்பென்ஸ், சைக்கலாஜிக்கல்
தனுஷ் நடிப்பில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் மித்ரன் ஜவகர் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் திருச்சிற்றம்பலம்.இப்படம் ஆகஸ்ட் 18 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். ஜூன் 15 ஆம் தேதி இந்த அறிவிப்பு வெளியானது. இதையடுத்து செல்வராகவன் இயக்கும் நானே வருவேன், தமிழ் தெலுங்கு ஆகிய மொழிகளில் தயாராகும் வாத்தி ஆகிய படங்களில் நடித்துக்
தமிழின் முக்கியமான புதினங்களில் ஒன்று கல்கியின் பொன்னியின்செல்வன். அது திரைப்படமாக உருவாகியிருக்கிறது. லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்தப்படத்தை மணிரத்னம் இயக்கியுள்ளார். இப்படத்தில், விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, ஐஸ்வர்யாராய், த்ரிஷா உட்பட பலர் நடித்துள்ளனர். இரண்டு பாகங்களாகத் தயாராகியிருக்கும் இப்படத்தின் முதல்பாகம் இவ்வாண்டு செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியாகும் என்றும்
2010 ஆம் ஆண்டு வெளியான வம்சம் திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் அருள்நிதி. அப்படத்தில் கிராமத்து இளைஞனாக நடித்திருந்தார். அதன்பின் பல படங்களில் அவர் நடித்திருந்தாலும் அவை எல்லாமே நகரத்துப் படங்கள்தாம். இந்நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு, ராட்சசி இயக்குநர் கெளதம்ராஜ் இயக்கத்தில் ஒரு படம் நடிக்க ஒப்புக்கொண்டார். அப்படத்தில் பெரிய மீசை, கிருதாவுடன் கிராமத்து இளைஞன்
விஜய்சேதுபதி நடிப்பில் தமிழில் இரண்டு படங்கள் தயாராக இருக்கின்றன. அந்தப்படங்களையும் அவர் முடித்துக்கொடுத்துப் பல மாதங்கள் ஆகிவிட்டன. அவற்றிற்கடுத்து அவருக்குத் தமிழில் படங்கள் இல்லை. இப்போது, இணையத்தொடர் மற்றும் படங்கள் என இந்தி மொழியில் ஓய்வின்றி நடித்துக் கொண்டிருக்கிறார். இந்தியில் தொடர்ந்து நடித்துக் கொண்டிருந்தாலும் அதனால் நல்ல வருமானம் இருந்தாலும் தமிழில் படமே இல்லை
சோனி நிறுவனம் முதலீடு செய்ய கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சனவரி 15,2022 அன்று வெளியானது. ரங்கூன் படத்தை இயக்கிய ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடிக்கிறார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.இப்படம் எஸ்கே 21 என்று சொல்லப்படுகிறது. இப்படத்தில் நாயகியாக சாய்பல்லவி நடிக்கவிருக்கிறார். இதுவரை
நடிகர் விஜய்யின் 66 ஆவது படம் ஏப்ரல் 6 அன்ரு தொடங்கியது. ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேசன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் தில் ராஜு மற்றும் சிரிஷ் இணைந்து தயாரிக்க, தேசிய விருது பெற்ற இயக்குநர் வம்சி பைடிப்பள்ளி இயக்குகிறார். இப்படத்துக்குக் கதை,திரைக்கதையை வம்சி பைடிப்பள்ளி – ஹரி – அஹிஷோர் சாலமன் ஆகியோர் எழுதியுள்ளனர். இப்படத்துக்கு வசனம் மற்றும் திரைக்கதை உதவி செய்கிறார் விவேக்.
சிவகார்த்திகேயன் இப்போது, ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ்,சுரேஷ் புரொடக்ஷன்ஸ் மற்றும் சாந்தி டாக்கீஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.எஸ்கே 20 என்று சொல்லித் தொடங்கப்பட்ட இந்தப்படத்துக்கு பிரின்ஸ் என்று பெயர் வைத்துள்ளார்கள். இந்தப் படம் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகி வருகிறது.இந்தப் படத்தினை தெலுங்கில் பெரும் வெற்றி பெற்ற ஜதிரத்னலு பட






















