சினிமா செய்திகள்

வாரிசு படத்தைக் கைப்பற்றிய சன் தொலைக்காட்சி – விலை மற்றும் விவரங்கள்

தற்போது விஜய் நடித்துக் கொண்டிருக்கும் படம் வாரிசு.

இது விஜய்யின் 66 ஆவது படம். இப்படம் ஏப்ரல் 6 அன்று தொடங்கியது. ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேசன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் தில் ராஜு மற்றும் சிரிஷ் இணைந்து தயாரிக்க, தேசிய விருது பெற்ற இயக்குநர் வம்சி பைடிப்பள்ளி இயக்குகிறார்.

இப்படத்துக்குக் கதை,திரைக்கதையை வம்சி பைடிப்பள்ளி – ஹரி – அஹிஷோர் சாலமன் ஆகியோர் எழுதியுள்ளனர். இப்படத்துக்கு வசனம் மற்றும் திரைக்கதை உதவி செய்கிறார் விவேக்.

ஏப்ரல் 6 அன்று அந்தப் படம் பூசையுடன் ஆரம்பமானது.அன்றே படப்பிடிப்பும் துவங்கியுள்ளது.

இந்தப்படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா, விஜய்க்கு ஜோடியாக நடிக்கிறார்.

இசையமைப்பாளர் தமன் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். கார்த்திக் பழனி ஒளிப்பதிவை கவனிக்க, படத்தொகுப்பை தேசிய விருதுபெற்ற படத்தொகுப்பாளர் பிரவீன் கே.எல் மேற்கொள்ள இருக்கிறார்.

இயக்குநர் வம்சி பைடிப்பள்ளி விஜய்க்காக முதன்முறையாக ஒரு புதிய கதையை புத்திசாலித்தனமான தொழில்நுட்பத்தில் உருவாக்கிக் கொண்டிருக்கிறார்.

இப்படம் 2023 பொங்கல் திருநாளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்நிலையில், இப்படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமை மற்றும் திரையரங்க வெளியீட்டிற்குப் பின்னான இணைய ஒளிபரப்பு உரிமை ஆகியனவற்றின் விற்பனை முடிந்துவிட்டதாம்.

வாரிசு படத்தின் இணைய ஒளிபரப்பு உரிமையை அமேசான் நிறுவனமும் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை சன் தொலைக்காட்சியும் பெற்றிருக்கிறதாம்.

தமிழ்,தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய நான்கு மொழிகளுக்கான ட்ஜிட்டல் உரிமை சுமார் நூறு கோடி என்றும் இதே நான்கு மொழிகளின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமை சுமார் 67 கோடி என்றும் சொல்லப்படுகிறது.

Related Posts