சினிமா செய்திகள்

சிவகார்த்திகேயனின் அடுத்த படம் – பெயர் மற்றும் விவரங்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

நடிகர் சிவகார்த்திகேயன் இப்போது, தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகும் பிரின்ஸ் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

இப்படத்தை, ‘ஜதி ரத்னலு’என்கிற தெலுங்குப் படம் மூலம் புகழ் பெற்ற கே்வி.அனுதீப் இயக்குகிறார்.

சுரேஷ் புரொடக்சன்ஸ் சார்பில் சுரேஷ் பாபு (சிவாஜி கணேசன் நடித்த “வசந்த மாளிகை” பட பிரபல தயாரிப்பாளர் புகழ்ராமாநாயுடு மகன்), நாராயண்தாஸ் நரங் மற்றும் புஸ்கூர் ராம் மோகன் ராவ் SVCLLP (Sree Venkateswara Cinemas LLP) மற்றும் Shanthi Talkies அருண் விஷ்வா ஆகியோர் இணைந்து இப்படத்தைத் தயாரிக்கின்றனர்.

பிப்ரவரி 10, 2022 இல் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. அக்டோபர் 24.2022 தீபாவளியை முன்னிட்டு இப்படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இதற்கடுத்து சிவகார்த்திகேயன் நடிக்கும் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று (ஜூலை 15,2022) காலை பத்தரை மணியளவில் வெளியாகியுள்ளது.

பிரின்ஸ் படத்தில் இணை தயாரிப்பு நிறுவனமாக இருந்த சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்கும் அந்தப்படத்தை மண்டேலா பட இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்குகிறார்.விது அய்யன்னா ஒளிப்பதிவு செய்கிறார். பரத்சங்கர் இசையமைக்கிறார். பிலோமின்ராஜ் படத்தொகுப்பு செய்கிறார்.

இப்படத்துக்கு மாவீரன் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.இப்படமும் தமிழ், தெலுங்கு ஆகிய இருமொழிகளில் தயாராகவுள்ளது. இதை இரண்டரை நிமிடங்கள் ஓடும் காணொலி மூலம் படத்தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

அந்தக் காணொலியைக் காண…..

Related Posts