பிக்பாஸ் ரைசாவுக்குக் கிடைத்த நல்வாய்ப்பு
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘பிக்பாஸ்’ முதல்பாகம் நிகழ்ச்சியின் மூலம் புகழ்பெற்றவர் விளம்பரப்பட நடிகை ரைசா.
அண்மையில் வெளியான ‘பியார் பிரேமா காதல்’ படத்தில் நாயகியாக நடித்திருந்தார். இவருடைய நடிப்பு நன்றாக இருப்பதாகப் பலரும் புகழ்ந்தனர்.
இதன் பலனாக,இயக்குநர் பாலா இயக்கத்தில் உருவாகும் ‘வர்மா’ படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் ரைசா.
இதுகுறித்து சன் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது…,
இயக்குநர் பாலா படத்தில் நடிக்க வாய்ப்பு என்றதும் நான் இன்ப அதிர்ச்சி அடைந்தேன். அதேசமயம் லேசான பயமும் இருந்தது. ஆனால் என்னை பொறுமையாகவே பாலா வேலை வாங்கினார். சிறிய வேடம் என்றாலும் மிகவும் அழுத்தமான வேடத்தில் ‘வர்மா’ படத்தில் நடித்திருக்கிறேன். இது எனக்கு நல்ல பெயரைப் பெற்றுத்தரும் என்று நம்பிக்கை இருக்கிறது
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.











