இயக்குநர் சுசீந்திரனை நிராகரித்த விஜய்
இயக்குநர் சுசீந்திரனின் “ஜீனியஸ்“ திரைப்படத்தின் முதல்பார்வை வெளியீட்டு நிகழ்ச்சி ஆகஸ்ட் 18 அன்று நடைபெற்றது
அதில் இயக்குநர் சுசீந்திரன், தயாரிப்பாளர் மற்றும் கதாநாயகன் ரோஷன்,ஒளிப்பதிவாளர் குருதேவ், படத்தொகுப்பாளர் தியாகு, கலை இயக்குநர் ஆனந்தன், வசனகர்த்தா அமுதேஸ்வர், நடன இயக்குநர் ஷோபி மற்றும் லலிதா ஷோபி, நடிகர்கள் யோகேஷ், மோனிகா, மீரா கிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
நிகழ்வில் இயக்குநர் சுசீந்தரன் பேசியதாவது….
நான் ஜீனியஸ் திரைப்படத்தின் கதையை முதலில் யோசித்த போது அது கதையாக இல்லை. கருவாகத் தான் இருந்தது.
நான் இந்தக் கதையையும், கதாபாத்திரத்தைப் பற்றியும் பலரிடம் ஒன் லைனாக கூறியுள்ளேன். அனைவருக்கும் அது மிகவும் பிடித்திருந்தது. இதை எப்படி கதையாக மாற்றுவது என்று பல வருடங்களாக யோசித்து வந்தேன்.
அது கதையாக மாறிய பின்பு ஜீனியஸ் கதையை விஜய், அல்லு அர்ஜுன், ஜெயம் ரவி உள்ளிட்ட பலரிடம் இந்தக் கதையைக் கூறியுள்ளேன். அனைவருக்கும் இந்தக் கதை மிகவும் பிடித்திருந்தது ஆனால் அவர்களால் சில காரணங்களால் நடிக்க முடியவில்லை.
கடைசியாக இந்தக் கதை அறிமுக நாயகன் மற்றும் புதிய தயாரிப்பாளரான ரோஷனிடம் சென்று தற்போது ஜீனியஸ் படமாக வந்துள்ளது.
இப்படம் மக்களுக்குக் கருத்துச் சொல்லும் பொழுதுபோக்குப் படமாக இருக்கும். எனக்கு இந்தியில் வெளிவந்து மாபெரும் வெற்றிபெற்ற பி.கே திரைப்படம் மிகவும் பிடிக்கும். அந்தப் படத்தின் பாதிப்பில் தான் நான் இப்படத்தை இயக்கியுள்ளேன்.
இப்படம் பி.கே போல மெசேஜ் சொல்லும் என்டர்டெயினாராக இருக்கும். இப்படத்தின் கதை அனைத்து மொழி மக்களுக்கும் பிடிக்கும் வகையில் உள்ளதால் படத்தை ஹிந்தி மற்றும் தெலுங்குவில் வெளியிட முடிவு செய்துள்ளோம்.
ரோஷனை இப்படத்தின் மூலமாக தயாரிப்பாளராகவும், ஹீரோவாகவும் அறிமுகம் செய்வதில் எனக்கு பெரும் மகிழ்ச்சி
இவ்வாறு இயக்குநர் சுசீந்திரன் பேசினார்.











