கசப்பை மறந்த உதயநிதி – கமலுடன் கைகோர்க்கிறார்
கமல்ஹாசன் நடிக்கும் ‘விக்ரம்’ படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார்.இந்தப்படத்தில், விஜய் சேதுபதி, பகத் பாசில், அர்ஜூன் தாஸ், காளிதாஸ் ஜெயராம், நரேன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
விக்ரம் திரைப்படத்தை நடிகர் கமல்ஹாசன் தன்னுடைய ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் மூலம் தயாரிக்கிறார். அனிருத் இசையமைத்துள்ளார். கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
ஜூன் 3 ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்தப்படத்தைத் தமிழகமெங்கும் திரையரங்குகளில் வெளீயிடும் உரிமையை உதயநிதியின் ரெட்ஜெயண்ட் நிறுவனம் பெற்றுள்ளதாம்.
இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்கிறார்கள்.
இந்தப்படத்தை விலை கொடுத்து வாங்கி வெளியிடவில்லையாம்.படத்துக்குத் திரையரங்குகளில் வரும் வசூலில் சேவைக்கட்டணம் மட்டும் எடுத்துக்கொள்ளுமாம் ரெட்ஜெயண்ட் நிறுவனம்.
இந்தத்தகவல் தெரிந்த பலர் வியப்பில் இருக்கிறார்கள். காரணம், ஏற்கெனவே கமலை வைத்து மன்மதன் அம்பு என்கிற படத்தை உதயநிதி தயாரித்தார். அப்போது கமல் நடந்துகொண்ட விதத்தால் மிகவும் பாதிக்கப்பட்ட உதயநிதி, இனி அவரோடு எந்த விதத்திலும் இணைந்து பணியாற்ற மாட்டேன் என்று சொல்லியிருந்தாராம்.
இப்போது அதையும் தாண்டி சேவைக்கட்டணத்துக்காக கமல் படத்தை வெளியிட முன்வந்திருப்பதுதான் பலரின் வியப்புக்குக் காரணம் என்கிறார்கள்.











