சினிமா செய்திகள்

தர்பார் முதல்பார்வை காப்பி – ஏ.ஆர். முருகதாஸ் திருட்டுக்கு ரஜினி உடந்தை?

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படம் தர்பார்.

இப்படத்தின் முதல்பார்வை இன்று வெளியானது. கூடவே இது அப்பட்டமான காப்பி என்கிற சர்ச்சையும் வந்திருக்கிறது.

முதல் பார்வை போஸ்டரில், ரஜினிகாந்தின் முகம் மட்டும் ஒரு திமிரான சிரிப்புடன் இடம் பெற்றிருக்க, சுற்றிலும் துப்பாக்கிகள், கை விலங்கு,காவல்துறை அணியும் இடைவார், தொப்பி, மோப்ப நாய் ஆகியன இடம்பெற்றிருக்கின்றன.

இவை யாவும் காவல் துறை சம்பந்தப்பட்டவை. இது, 2017 ஆம் ஆண்டில் வெளிவந்த, அர்னால்டு ஸ்வாஸநேகர் நடித்த ஆங்கிலப் படமான ‘கில்லிங் கன்தர்’ என்ற படத்தின் வடிவமைப்பு போலவே இருப்பதாக சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.

ஆங்கிலப் பட வடிவமைப்பில் படத்தில் நடித்துள்ள மற்ற நடிகர்கள், நடிகைகள் இடம் பிடித்துள்ளார்கள். ஆனால், ‘தர்பார்’ பட முதல்பார்வையில் ரஜினிகாந்த் மட்டுமே இருக்கிறார். பின்னணியில் காவல்துறை சம்பந்தப்பட குறியீடுகள் இருப்பதால், இரண்டும் ஒன்றுதான் என்கிறார்கள்.

மொமெண்ட்டோவை கஜினியாக்கியவர் என்பதோடு எடுக்கும் எல்லாப்படத்திலும் ஏதாவதொரு திருட்டைச் செய்யும் முருகதாஸ் இதை காப்பியடித்ததில் ஒன்றும் ஆச்சரியமில்லை என்கிறார்கள்.

இந்தமுறை ரஜினி அதற்கு உடந்தையாக இருக்கிறார்.

Related Posts