சினிமா செய்திகள்

விஜய் 69 கதாநாயகி வில்லன் மற்றும் சில விவரங்கள்

நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கியிருப்பதால் அடுத்து அவர் நடிக்கும் படம் அவருடைய கடைசிப்படம் என்று சொல்லப்பட்டிருக்கிறது.

நடிகர் விஜய்யின் கடைசிப்படம் என்று சொல்லப்படும் 69 ஆவது படம் என்ன? அதை இயக்கப் போவது யார்? தயாரிக்கவிருக்கும் நிறுவனம் எது? என்பன குறித்து பல்வேறு தகவல்கள் உலவி வந்தன.

அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளிவரவில்லை.

அதேசமயம், விஜய் 69 படத்தை இயக்கப்போவது் இயக்குநர் எச்.வினோத் என்றும்,

அரசியலை அடிப்படையாகக் கொண்ட அவருடைய கதையும் திரைக்கதையும் விஜய்க்குப் பிடித்திருக்கிறது என்றும் செயதிகள் வந்தன.

இதுகுறித்து மே 7 ஆம் தேதியன்று வெளியிட்ட செய்தியில்….

இயக்குநர் எச்.வினோத், சமுதாய அக்கறை மிகுந்தவர், தன் படங்களில் வெகுமக்கள் நலன் பெறும் வகையில் கருத்துகளைச் சொல்பவர். அஜீத் நடிப்பில் வெளியான துணிவு படத்தில் வங்கிகள் சாமானிய மக்களை எப்படியெல்லாம் வதைக்கின்றன என்பதை வெளிப்படுத்தியவர்.அரசியலிலும் நாட்டமுடையவர் அதிலும் குறிப்பாக தமிழ்த் தேசிய அரசியலில் பயணிக்க விரும்புகிறவர்.

இதனால் அவர் இயக்கத்தில் நடிப்பது நல்லது என விஜய் முடிவெடுத்திருப்பதாகச் சொல்லப்படுகிறது.

எச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருக்கும் அந்தப்படத்தை பெங்களூருவை மையமாகக் கொண்டிருக்கும் கே வி என் புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரிக்கவிருப்பதும் உறுதியாகிவிட்டதாம்.

ஏற்கெனவே நிறையப் படங்களை விநியோகம் செய்து பேர் பெற்றிருக்கும் அந்நிறுவனம் இப்போது கேஜிஎஃப் நாயகன் யாஷ் நடிக்கும் டாக்சிக் படத்தைத் தயாரிக்கிறது.

அதோடு சூர்யா நடிக்கும் கங்குவா உட்பட சில படங்கிளில் இணைந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

யாஷ் படத்தைத் தய்யாரிப்பதன் மூலம் இந்திய அளவில் கவனம் பெற்றுள்ள அந்நிறுவனத்தை விஜய் தரப்பில் இருந்து அணுகி விஜய் 69 படத்தைத் தயாரிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்களாம்.

அவரகளும் சம்மதம் சொன்ன பிறகு நடந்த பேச்சுவார்த்தைகளில் விஜய் சம்பளம் உள்ளிட்ட பல விசயங்கள் பேசப்பட்டு சுமுகமான உடன்பாடு எட்டப்பட்டதாம்.

இன்னும் சில விசயங்கள் பேசி இறுதி செய்யப்பட வேண்டியிருக்கிறதாம்.

அவையும் விரைவில் இறுதி செய்யப்படுவிடும் என்றும் அதன்பின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று சொல்கிறார்கள்.

விஜய்யின் சம்பளம் அவர் படத்துக்கு ஆகும் செலவு ஆகியனவற்றைக் கணக்கிட்டு அப்பணத்தைத் திரும்ப எடுப்பது என்பது சவாலான காரியமென்றும் அதைச் சமாளிக்கச் சரியான நிறுவனமாக கே வி என் புரொடக்சன்ஸ் இருக்குமென்றும் சொல்கிறார்கள்.

என்ன நடக்கிறதெனப் பார்ப்போம்.

இவ்வாறு அன்று கூறியிருந்தோம்.

இந்நிலையில் இன்று கே வி என் புரொடக்சன்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள சமூகவலை தளப்பதிவில் விஜய் 69 ஆவது படம் குறித்த அறிவிப்பு இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.

இதன்மூலம் அந்நிறுவனம் விஜய் 69 படத்தைத் தயாரிப்பது உறுதியாகியுருக்கிறது.

அடுத்து,

விஜய் 69 படம்,
எச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடிக்கிறார். கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். வில்லனாக பாபிதியோல் நடிக்கிறார். அனிருத் இசையமைக்கிறார்.

என்பன உறுதியாகியிருக்கிறது.

இன்னும் சில நாட்களில் புரட்டாசி மாதம் தொடங்குவதால் இன்று இந்த அறிவிப்பு வெளியாகிறது என்று சொல்கிறார்கள்.

Related Posts