டான் விற்பனை விலை – விஸ்வரூபம் எடுக்கும் சிவகார்த்திகேயன்
சிவகார்த்திகேயன் நடிப்பில், இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் “டான்”. ‘டாக்டர்’ படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக நடித்த பிரியங்கா மோகன் இந்தப் படத்தில் மீண்டும் அவருடன் இணைந்து நடித்துள்ளார்.
இவர்களுடன் நடிகர் எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி, சூரி, பால சரவணன்,ஆர்.ஜே.விஜய், சிவாங்கி, முனிஷ்காந்த், காளி வெங்கட், ராதா ரவி, சிங்கம்புலி, ஜார்ஜ், ஆதிரா மற்றும் பல நடிகர்கள் ‘டான்’ படத்தில் நடித்துள்ளனர்.
இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது.அனிருத் இசையமைத்துள்ளார்.
இப்படம் மார்ச் 25 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவித்திருக்கிறார்கள். ஆனால், அதே தேதியில் ராஜமெளலியின் ஆர் ஆர் ஆர் படம் வெளியாகும் என்று சொல்லப்பட்டிருப்பதால் டான் வெளியீடு தள்ளிப் போகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், இப்படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை கலைஞர் தொலைக்காட்சி பெற்றிருக்கிறதாம். திரையரங்க வெளியீட்டுக்குப் பின்னரான இணைய ஒளிபரப்பு உரிமையை நெட்ப்ளிக்ஸ் தளம் பெற்றிருக்கிறதாம்.
இது முக்கியமல்ல. இதற்காகக் கொடுக்கப்பட்டிருக்கும் விலைதான் முக்கியம்.
தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமை பதினெட்டு கோடியாம். இணைய உரிமை 22 கோடிக்கு விற்கப்பட்டிருக்கிறதாம்.
இதுதான் திரையுலகினரை வியக்கவைத்திருக்கிறது.
ஏனெனில், இப்படத்தை முதல்பிரதி அடிப்படையில் சிவகார்த்திகேயனே தயாரித்துக் கொடுத்தார். அதற்காக அவருக்கு லைகா நிறுவனம் கொடுத்த தொகை நாற்பது கோடி என்று சொல்லப்பட்டது.
அந்த நாற்பது கோடியும் இப்போதே கிடைத்துவிட்டது. இதனால், தமிழ்நாடு வசூல், பிறமொழி உரிமைகள், வெளீநாட்டு விநியோகம் ஆகியனவற்றில் கிடைக்கும் எல்லாமே இலாபம் என்பதால், டான் படம் மிகப்பெரிய இலாபம் சம்பாதிக்கும் என்றும் சிவகார்த்திகேயன் சந்தை மதிப்பு பெரிதும் உயரும் என்றும் சொல்கிறார்கள்.











