முதல்நாள் வசூல் 15 கோடி 2 ஆம் நாள் மொத்தமாகக் குறைந்தது – விக்கித்து நிற்கும் வலிமை விநியோகஸ்தர்கள்
பெரும் எதிர்பார்ப்புடன் வெளியானது அஜீத்தின் வலிமை படம். முதல்நாளான நேற்று அதிகாலை முதலே எல்லாத் திரையரங்குகளிலும் கூட்டம் பெரிதாக இருந்தது.
அதேசமயம், முதல்காட்சி முடிந்ததிலிருந்தே படம் சரியில்லை என்பது பரவத் தொடங்கிவிட்டது. ஆனாலும் நேற்று முழுக்க திரையரங்குகளில் கூட்டம் நன்றாக இருந்திருக்கிறது.
முதல்நாளில் மட்டும் மொத்தமாக 35 கோடி வசூல் என்று படக்குழு தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வமற்ற முறையில் சொல்லப்படுகிறது.
உண்மையில் முதல்நாள் பதினைந்து கோடிதான் வசூலாகியிருக்கிறது என்று விநியோகஸ்தர்கள் மத்தியில் பேசப்படுகிறது.
முதல்நாள் அப்படியிருக்க இரண்டாம் நாளான இன்று காலை மற்றும் மதியக்காட்சிகளுக்குக் கூட்டமே இல்லையாம். மொத்தமாகக் கூட்டம் குறைந்து திரையரங்குக்கு ஐம்பது பேர் அறுபது பேர் படம் பார்க்கிறார்களாம்.
பொதுவாக இரண்டாம்நாள் கூட்டம் குறையும் என்று சொல்லப்படுகிறது. இன்று மாலை மற்றும் இரவுக்காட்சிகளுக்குக் கூட்டம் வந்துவிடும் என்று எதிர்பார்க்கிறார்கள்.
அப்படி வரவில்லையெனில், போட்ட பணம் பாதிக்குமேல் நட்டமாகிவிடும் என்று சொல்லி விக்கித்து நிற்கிறார்களாம் விநியோகஸ்தர்கள்.











