சர்கார் கதை திருட்டின் தொடர்ச்சி – ஏ.ஆர்.முருகதாஸ் பற்றி பரவும் அதிர்ச்சிதகவல்
சர்கார் படத்தின் கதை திருடப்பட்டது என்கிற வழக்கு வந்து பெரும் பரபரப்பு ஏற்பட்டது. நீதிமன்றத்தில் அது முடிவுக்கு வந்துவிட்டது. சர்கார் படமும் சுபிட்சமாக வெளிவரவிருக்கிறது.
ஆனால் திரையுலக வட்டாரத்தில் குறிப்பாக உதவி இயக்குநர்கள் வட்டாரத்தில் அச்சிக்கலின் தொடர்ச்சியாகப் பல்வேறு வினைகள் இருக்கின்றன.
சமூகவலைதளங்கள் மற்றும் வாட்சப் குழுக்களில் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் குறித்து பல விமர்சனங்கள் சர்ச்சைக்குரிய கருத்துகள் பகிரப்பட்டுக்கொண்டே இருக்கின்றன.
அவற்றில் ஒன்று….
ஏ.ஆர்.முருகதாஸ் ஒரு கதை திருடன்.
(1) தீனா ,
இந்த கதை R. நித்தியகுமார் என்ற இயக்குநரின் கதை.. இவர் K. சுபாஷ், SJ. சூர்யா, இவர்களிடம் இனை இயக்குநராகவும்.. பிறகு நடிகர் அருன்விஜய் நடித்த, வேதா’திரைப்படத்தை இயக்கியவர்.
( 2 ) ரமணா ,
இந்த கதை நந்தகுமார் என்ற இயக்குநரின் கதை.. இவர் மறைந்த இயக்குநர் ராஜசேகர்,மற்றும் P. வாசு அவர்களிடம் இனை இயக்குநராகவும் பிறகு விஜயகாந்த் நடித்த தென்னவன் ‘திரைப்படத்தை இயக்கியவர்… இவர் KT. குஞ்சுமோன் ( திரைப்பட தயாரிப்பாளர்) இவரின் மகனை வைத்து கோட்டீஸ்வரன் என்ற படத்தை இயக்கும் போது..AR. முருகதாஸ்…. நந்தகுமாரிடம் உதவி இயக்குநராக பணியாற்றினார்,
( 3 ) கஜினி
இந்த படத்தின் கதை … மெமொன்டோ என்ற ஒரு ஆங்கில படத்தில்லிருந்து திருடப்பட்டது.
( 4 ) துப்பாக்கி
இந்த கதை வாசு என்ற உதவி இயக்குநரிடம்,பாதி கதை பிரேம்குமார் என்ற உதவி இயக்குநரிடமிருந்து திருடப்பட்டது.. வாசு… இவர் அஜீத் நடித்த நிறைய படங்களுக்கு உதவி இயக்குநராக பணியாற்றியுள்ளார் .
( 5 ) கத்தி
இந்த கதை… கோபி நயினார் என்ற இயக்குநரின் கதை. இவர் நயன்தாரா நடித்த ‘ அறம் ‘ படத்தை இயக்கியவர்..
(6) ஸ்பைடர் மேன்
இந்த கதை இவரிடம் தெலுங்கு படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றிய சாம்சன் சைத்தானியா என்ற உதவி இயக்குநரிடமிருந்து திருடப்பட்டது…
( 7 ) சர்க்கார் ‘
இந்த கதை… வருண் ராஜேந்திரன் என்பவரிடம் இருந்து திருடப்பட்டது… இவர் SA. சந்திரசேகர்.. மற்றும் பல இயக்குநர்களிம்…இனை இயக்குநராக பணியாற்றினார்….
குறிப்பு… அடுத்த படத்திற்கு கதை திருட AR. முருகதாஸ் வருகிறார்… உசார்…. உசார்… இப்படிக்கு : கதையை பறிகொடுத்த உதவி இயக்குநர்.
இப்படி ஒரு வாட்சப் தகவல் பரவுகிறது. கஜினி படம் மெமண்ட்டோ என்பது எல்லோருக்கும் தெரிந்ததால் மற்ற எல்லாமே உண்மைதான் என்று பலரும் நம்புகிறார்கள்.