தமிழ்த்திரையுலகுக்கு வரும் புதிய பெண் தயாரிப்பாளர்
விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள சீதக்காதி உட்பட பல படங்களைத் தயாரித்துக்கொண்டிருக்கும் டிரைடெண்ட் ஆர்ட்ஸ் நிறுவனத்துக்கு திரையுலகில் இது இருபத்தைந்தாவது ஆண்டு.
அதையொட்டி அந்நிறுவனத்தை உருவாக்கி வெற்றிகரமாக நடத்திக் கொண்டிருக்கும் ரவீந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்…..
ஆரம்பத்தில் நானும் என் நண்பர் லத்தீப்பும் சில நண்பர்களுடன் சேர்ந்து குழுவாக படங்களை வாங்கி விநியோகம் செய்தோம்.
ஆண்பாவம், விடிஞ்சா கல்யாணம், எங்க ஊரு பாட்டுகாரன், உள்ளே வெளியே, உள்ளத்தை அள்ளித்தா-னு நிறைய படங்களுக்கு நல்ல ஆதரவு கொடுத்திங்க.
அதன்பின்பு லத்தீப்-யும் நானும் இணைந்து தனியாக பொற்காலம் படத்தை விநியோகம் செய்தோம். அந்த படத்தைப் பாராட்டி எழுதாத பத்திரிக்கைகளே கிடையாது.
தமிழ்நாட்டோட பெரிய ஏரியானு சொல்ற NSC-ல படங்களை வெளியிட்டோம். அவ்வளவு பெரிய ஏரியாவுல நாங்க நல்ல படங்களை ரிலீஸ் பண்ணாலும், நாங்க படத்தை மட்டும் தியேட்டருக்கு கொண்டுபோய் சேத்தோம். அந்த படத்தை மக்கள்கிட்ட கொண்டுபோனது ஊடகங்கள்தான்,
நல்லபடம்னு தியேட்டருக்கு போய் பாத்த பிறகுதான் ஆடியன்ஸ்க்கு தெரியும். ஆனா இது நல்லபடம் நீங்கபோய் பாக்கலாம்னு ஆடியன்ஸை தியேட்டருக்கு போகவைப்பது ஊடகங்கள்தான்.
அஜித்-கூட வாலி, வில்லன், முகவரி, ஆரம்பம்-னு நிறைய வெற்றிப் படங்களை விநியோகம் செய்தோம்.
விஜய்-கூட சச்சின், திருப்பாச்சி, கத்தி, மெர்சல்னு பிரமிக்கிற வெற்றிப் படங்களை விநியோகம் செய்தோம்.
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் காலா, கமல் சாரோட உன்னைபோல் ஒருவன்.. இந்த தமிழ்சினிமாவோட அடையாளமா இருக்கிற படங்களை வெளியிட்டதுல எங்களுக்குப் பெருமை.
விஷாலின் பாண்டியநாடு, பூஜை, ஆம்பள
தனுஷின் அது ஒரு கனாகாலம், தேவதையைகண்டேன், கொடி, விசாரணை.
விக்ரமின் பீமா
சிம்புவோட குத்து, சரவணா, அச்சம் என்பது மடமையடா
சிவகார்த்திகேயனின் ரஜினிமுருகன்
விஜய்சேதுபதியோட நானும் ரவுடிதான்
ஜீவாவின் ராம்
சசிகுமாரின் சுப்ரமணியபுரம், சுந்தரபாண்டியன்
சமுத்திரக்கனியின் அப்பா
கேப்டன் விஜயகாந்த் அவர்களின் கள்ளழகர்,
முரளியின் பூந்தோட்டம்
பார்த்திபன் அவர்களின் வெற்றிக்கொடிகட்டு, அழகி
இப்படி கிட்டத்தட்ட மூணு தலைமுறை நடிகர்களோட படங்களை நாங்கள் வெளியிட்டு இருக்கோம்.
விநியோகத்துல எங்களுக்குக் கிடைச்ச வெற்றிக்குப் பிறகு நாங்க தயாரிப்புல இறங்கினோம்.
சசிகுமார் நடிச்ச வெற்றிவேல் படம் எங்கள் முதல் தயாரிப்பு, அதன்பிறகு சிவலிங்கா படத்தை தயாரிச்சோம்.
மற்ற தயாரிப்பாளர்களுடன் இணைந்து விக்ரம் வேதா, அவள், லஷ்மி, தமிழ்படம் 2, அறம், ராட்சசன்-னு இந்த வருஷமும், போன வருஷமும் வெளியான முக்கியமான படங்களை தயாரிச்சிருக்கோம்.
இப்போ மற்ற தயாரிப்பாளர்களோட இணைந்து சீதக்காதி, ஆயிரா, தேவி 2, தில்லுக்கு துட்டு 2, கமல் சாரோட இணைந்து விக்ரம் நடிக்கிற படங்களை தயாரிச்சுகிட்டு இருக்கோம்.
இதுமட்டுமில்லாம இன்னும் சில படங்கள் தயாரிப்புல இருக்கு. அந்த அறிவிப்புகளை கூடிய சீக்கிரம் வெளியிடுவோம். நாங்க விநியோகம் பண்ண ஆரம்பிச்சு 25 வருஷம் ஆயிருச்சு.
550 படங்களுக்கு மேல வெளியிட்டு இருக்கோம்.
இந்த நவீன காலத்துக்கு ஏற்ப டிஜிட்டல்லயும் டிரைடெண்ட் ஆர்ட்ஸ் களம் இறங்கியிருக்கு.
வெப் சீரிஸ் தயாரிச்சு வெளியிடுகிறோம்.
இப்போது என் மகள் செளந்தர்யாவும் எங்கள் நிறுவனத்தில் தயாராகும் வெப்சீரிஸ் மற்றும் திரைப்படங்களின் உருவாக்கத்தில் துணைநிற்கிறார்.
இவ்வளவு ஆண்டுகளாக எங்களுக்கு ஒத்துழைப்பு கொடுத்து எங்கள் வளர்ச்சிக்குத் துணை நின்ற அனைவருக்கும் நன்றி. உங்கள் ஆதரவு என்றும் தொடர வேண்டுகிறோம். நன்றி.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
தமிழ்த்திரையுலகுக்கு வரும் புதிய பெண் தயாரிப்பாளருக்கு நல்வரவு.