சிம்பு சுந்தர்சி படத்தின் பெயர் இதுதான்
தெலுங்கில் 2013 ஆம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற படம் அத்திரண்டிகி தாரேதி.
இப்படத்தை இப்போது தமிழில் எடுத்துக்கொண்டிருக்கிறார்கள்.
இந்தப்படத்தில் சிம்பு நாயகனாக நடிக்கிறார். சுந்தர்.சி இயக்குகிறார். மேகா ஆகாஷ் கதாநாயகியாக நடிக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் மாதம் ஜார்ஜியாவில் தொடங்கியது.அதன்பின் ஐதராபாத்தில் நடந்தது.
இந்நிலையில் படத்தின் பெயரை தீபாவளியன்று வெளியிடவிருக்கிறார்கள்.
இந்தப்படத்துக்கு அண்மையில் வெளியான மணிரத்னம் இயக்கிய செக்கச் சிவந்த வானம் படத்தில் சிம்பு பேசிய ஒரு வசனத்தையே பெயராக வைத்துள்ளார்களாம்.
அப்படத்தின் முன்னோட்டத்திலேயே இடம்பெற்ற அந்த வசனம் சிம்பு ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்பட்டது.
அதுவே படத்தின் தலைப்பாக வரும்போது கொண்டாட்டத்துக்குக் குறைவிருக்காது.