வணங்கான் படத்தில் நடந்துள்ள மாற்றம்
சூர்யா,கீர்த்தி ஷெட்டி, மமிதா உட்பட பலர் நடிக்கும் படம் வணங்கான். இயக்குநர் பாலா இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு மார்ச் 28 அன்று தொடங்கியது.
மிகுந்த பொருட்செலவில் உருவாக்கப்படும் இப்படத்துக்கு இசையமைக்கிறார் ஜி. வி. பிரகாஷ். கலை இயக்குநர் மாயப்பாண்டி. படத்தொகுப்பாளர் சதீஷ் சூர்யா.
இப்படத்தை சூர்யாவின் 2டி நிறுவனமே தயாரிக்கிறது.
இந்தப்படத்தின் முதல்கட்டப் படப்பிடிப்பு கன்னியாகுமரி மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் நடைபெற்று நிறைவடைந்திருக்கிறது.
அடுத்தகட்டப் படப்பிடிப்பு ஆகஸ்ட் முதல்வாரத்தில் தொடங்கவிருப்பதாகச் சொல்லப்படுகிறது.
இந்நிலையில் இப்படத்தின் ஒளிப்பதிவாளரை அதிரடியாக மாற்றிவிட்டார்களாம்.
இதுவரை ஒளிப்பதிவு செய்துவந்த பாலசுப்பிரமணியத்தை மாற்றிவிட்டு ஓம்பிரகாஷை ஒப்பந்தம் செய்திருக்கிறார்களாம்.
பாலசுப்பிரமணியத்துக்கு வேறு படங்கள் இருக்கின்றன என்று சொன்னதால் அவரை மாற்றிவிட்டு ஓம்பிரகாஷை வைத்து மீதிப்படத்தை எடுக்கவிடுக்கிறார்களாம்.












