கெளதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடித்திருக்கும் எனை நோக்கிப் பாயும் தோட்டா படம் நவம்பர் 29 அன்று வெளியாகவிருக்கிறது. அதேதேதியில்,இயக்குநர் பா.ரஞ்சித் தயாரித்துள்ள இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு படமும் வெளியாகவிருக்கிறது. இப்படத்தில், தினேஷ், ஆனந்தி, முனீஷ்காந்த், ரித்விகா, ஜான் விஜய் ஆகியோர்
சினிமா
1964 ஆம் ஆண்டு நடிகர்திலகம் சிவாஜிகணேசன் நடிப்பில் வெளியான படம் பச்சை விளக்கு.55 ஆண்டுகளுக்குப் பிறகு அதேபெயரில் புதிய தமிழ்ப்படமொன்று தயாராகியிருக்கிறது. இந்தப் படத்தில் டாக்டர் மாறன், ‘அம்மணி’ புகழ் மகேஷ் இருவரும் நாயகர்களாக நடிக்க, கதாநாயகிகளாக புதுமுகங்கள் தீஷா, தாரா இருவரும் நடித்துள்ளனர். கன்னட பட உலகின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவரான ரூபிகா முக்கிய பாத்திரம் ஒன்றில்
ஜோதிகா இப்போது கார்த்தியுடன் இணைந்து நடிக்கும் படம் மற்றும் பொன்மகள் வந்தாள் ஆகிய படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இவ்விரண்டு படங்களிலும் ஜோதிகா நடிக்க வேண்டிய காட்சிகள் படமாக்கப்பட்டுவிட்டனவாம். இவற்றைத் தொடர்ந்து இம்மாதம் 20 ஆம் தேதி முதல் புதிய படமொன்றில் நடிக்கவிருக்கிறாராம் ஜோதிகா. ‘கத்துக்குட்டி’ படத்தை இயக்கிய இரா.சரவணன் இந்தப் படத்தை இயக்கவிருக்கிறார்.
நடிகர் அதர்வாவின் தம்பி ஆகாஷ். இவருக்கும் விஜய் 64 படத்தைத் தயாரிக்கும் சேவியர் பிரிட்டோவின் ஒரே மகளான சினேகாவுக்கும் விரைவில் திருமண நிச்சயதார்த்தம் நடக்கவிருக்கிறதாம். 2012 ஆம் ஆண்டு வெளியான சட்டம் ஒரு இருட்டறை 2 படத்தின் இயக்கியிருந்தார் சினேகா. இவரும் அதர்வா தம்பி ஆகாஷும் ஒன்றாகப் படித்தவர்களாம். அப்போதே இருவருக்குள்ளும் காதல் மலர்ந்திருக்கிறது. இருவரும் வெவ்வேறு
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை ‘தலைவி’ என்ற பெயரில் தமிழிலும், ‘ஜெயா’ என்ற பெயரில் இந்தியிலும் இயக்குநர் ஏ.எல் விஜய் இயக்குகிறார். இந்தப் படத்தில் ஜெயலலிதாவாக கங்கணா ரணாவத் நடிக்கிறார். இதேபோல் கௌதம் வாசுதேவ் மேனன் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை இணையதளத் தொடராகத் தயாரிக்க இருப்பதாகவும் அதில் நடிகை ரம்யாகிருஷ்ணன் ஜெயலலிதாவாக நடிக்க இருப்பதாகவும்
பிகில் படத்துக்கு அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார் விஜய். இது அவருக்கு 64 ஆவது படம். இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையில் 22 நாட்கள் நடந்தது. அடுத்த கட்டப் படப்பிடிப்பு டெல்லியில் நடந்து வருகிறது. இந்தப் படத்தில் மாளவிகா மோகனன் கதாநாயகியாக நடிக்கிறார். இவர் ரஜினியின் பேட்ட படத்தில் நடித்தவர். இன்னொரு நாயகியாக ஆண்ட்ரியா நடிக்கிறார்.
நகைச்சுவை வேடங்களில் நடித்து வந்த ஆர்.ஜே.பாலாஜி, எல்கேஜி படத்தின் மூலம் கதாநாயகன் ஆனார். இவ்வாண்டு தொடக்கத்தில் பிப்ரவரி 22 ஆம் வெளியான அப்படம் வெற்றி பெற்றது. ஆனால் இதுவரை அடுத்த படம் குறித்த அறிவிப்பை வெளியிடாமல் இருந்தார் ஆர்.ஜே.பாலாஜி. இன்று மாலை (நவம்பர் 10) தன்னுடைய அடுத்த படம் குறித்த அறிவிப்பை அவர் வெளியிட்டார். அதன்படி அவருடைய அடுத்த படத்தின் பெயர் மூக்குத்தி
சீமராஜா படத்தைத் தொடர்ந்து பொன்ராம் இயக்கும் புதிய படம் ’எம்.ஜி.ஆர் மகன்’. இந்தப் படத்தில் சசிகுமார், சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், சமுத்திரக்கனி, மிருணாளினி ரவி, சிங்கம் புலி ஆகியோர் நடிக்கின்றனர். கதை, திரைக்கதை, வசனம் மற்றும் இயக்கம் ஆகிய பணிகளைக் கவனிக்கிறார் இயக்குநர் பொன்ராம். இந்தப் படத்துக்கு வினோத் ரத்தினசாமி ஒளிப்பதிவு செய்ய, அந்தோனிதாசன் இசையமைக்கிறார்.
இறுதிச்சுற்று பட இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்திருக்கும் படம் சூரரைப் போற்று. சூர்யாவின் 38 ஆவத் படமாகத் தயாராகியிருக்கும் இப்படத்தின் பூசை 2019 ஏப்ரல் 7 ஆம் தேதி நடந்தது. படப்பிடிப்பு 2019 ஏப்ரல் 8 ஆம் தேதி சென்னையில் தொடங்கியது. இப்படத்தை சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தினர் மற்றும் சமீபத்தில் ஆஸ்கர் விருது வென்ற சீக்யா எண்டர்டெயின்மெண்ட்-ன்
மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கவிருக்கிறது. தாய்லாந்தில் தொடங்கும் முதல்கட்டப் படப்பிடிப்பில் கார்த்தி நடிக்கிறார். இப்படத்தில் ஏராளமான நடிகர் நடிகைகள் நடிக்கவிருப்பதாகச் செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றன. எதையும் படக்குழுவினர் அறிவிக்கவும் இல்லை வரும் செய்திகளை மறுக்கவும் இல்லை. இந்நிலையில், இப்படத்தில் நடிக்க அழைக்கப்பட்ட





















