சினிமா செய்திகள்

விஜய் 64 படம் பற்றிய செய்தி – உறுதிப்படுத்திய நடிகை

பிகில் படத்துக்கு அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார் விஜய். இது அவருக்கு 64 ஆவது படம். இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையில் 22 நாட்கள் நடந்தது.

அடுத்த கட்டப் படப்பிடிப்பு டெல்லியில் நடந்து வருகிறது. இந்தப் படத்தில் மாளவிகா மோகனன் கதாநாயகியாக நடிக்கிறார். இவர் ரஜினியின் பேட்ட படத்தில் நடித்தவர்.

இன்னொரு நாயகியாக ஆண்ட்ரியா நடிக்கிறார். தற்போது நடிகை கவுரி கிஷானையும் விஜய் படத்துக்கு ஒப்பந்தம் செய்துள்ளனர்.

இவர் விஜய் சேதுபதி-திரிஷா நடித்த ‘96’ படத்தில் இளம் வயது திரிஷா கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார். விஜய் படத்தில் நடிப்பதை கவுரி கிஷான் சமூக வலைத்தளத்தில் உறுதிப்படுத்தி உள்ளார்.

அவர் கூறும்போது, விஜய் படத்தில் நடிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது அனைவருடைய ஆசிர்வாதத்தால் இந்தப் படத்தில் நடிக்க எனக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது என்றார்.

கடந்த சில நாட்களாகவே விஜய் 64 படத்தில் கவுரி கிஷன் நடிக்கவிருக்கிறார் என்று பரவி வந்த செய்தியை கவுரிகிஷன் உறுதிப்படுத்தியுள்ளார்.

Related Posts