மணிரத்னம் நிராகரிப்பு அமலா பால் கோபம்
மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கவிருக்கிறது.
தாய்லாந்தில் தொடங்கும் முதல்கட்டப் படப்பிடிப்பில் கார்த்தி நடிக்கிறார்.
இப்படத்தில் ஏராளமான நடிகர் நடிகைகள் நடிக்கவிருப்பதாகச் செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றன. எதையும் படக்குழுவினர் அறிவிக்கவும் இல்லை வரும் செய்திகளை மறுக்கவும் இல்லை.
இந்நிலையில், இப்படத்தில் நடிக்க அழைக்கப்பட்ட நடிகை அமலாபாலை, மணிரதனம் நிராகரித்துவிட்டதாக ஒரு தகவல் உலவுகிறது.
அவரை அழைத்து அவருக்கு லுக் டெஸ்ட் எடுத்துப் பார்த்தாரம் மணிரத்னம். அதில் அவருக்குத் திருப்தி இல்லையென்று சொல்லப்படுகிறது.
இதனால் அமலாபால் வேண்டாமென்று கறாராகச் சொல்லிவிட்டாராம்.
அவருக்குப் பதிலாகத்தான் மலையாள நடிகை ஐஸ்வர்யா லட்சுமி நடிக்கிறார் என்று சொல்கிறார்கள்.
புதுநடிகை போல தன்னைக் கூப்பிட்டு டெஸ்ட் எடுத்து அதன்பின் வேண்டாமெனச் சொன்னதால் மணிரத்னம் மீது கோபமாக இருக்கிறாராம் அமலாபால்.











