2020 பொங்கல் போட்டியில் சூரரைப் போற்று – பரபரக்கும் திரையுலகம்
இறுதிச்சுற்று பட இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்திருக்கும் படம் சூரரைப் போற்று.
சூர்யாவின் 38 ஆவத் படமாகத் தயாராகியிருக்கும் இப்படத்தின் பூசை 2019 ஏப்ரல் 7 ஆம் தேதி நடந்தது. படப்பிடிப்பு 2019 ஏப்ரல் 8 ஆம் தேதி சென்னையில் தொடங்கியது.
இப்படத்தை சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தினர் மற்றும் சமீபத்தில் ஆஸ்கர் விருது வென்ற சீக்யா எண்டர்டெயின்மெண்ட்-ன் குணீத் மோங்கா ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.
இப்படத்தின் நாயகியாக அபர்ணா பாலமுரளி நடித்திருக்கிறார்.
இப்படத்துக்கு இசை ஜீ.வி.பிரகாஷ். நிக்கேத் பொம்மிரெட்டி ஒளிப்பதிவு செய்ய, கலை இயக்குநராக ஜாக்கி பணியாற்றுகிறார். படத்தொகுப்பிற்கு சதீஷ் சூர்யாவும், உடைகளுக்கு பூர்ணிமா ராமசாமியும் பொறுப்பேற்றிருக்கிறார்கள்.
இப்படம் 2029 கிறிஸ்துமஸ் விடுமுறையையொட்டி வெளியாகும் என்று சொல்லப்பட்டிருந்தது.
ஆனால் இப்போது அதன் வெளியீடு தள்ளிப்போயிருக்கிறது.
2020 பொங்கல் நாளில் படத்தை வெளியிடத் திட்டமிடுகிறார்களாம். ஏற்கெனவே அந்தத் தேதியில் ரஜினியின் தர்பார் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது, தனுஷின் பட்டாஸ் படமும் வெளியாகும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.
இந்நிலையில் சூர்யா படமும் வெளியாகவிருக்கிறது என்று சொல்லப்படுவதால் திரையுலகில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.









