சினிமா செய்திகள்

தனுஷ் 55 படம் கைவிடப்பட்டது? – பரபரப்பு தகவல்

2024 ஆம் ஆண்டு நவம்பர் எட்டாம் தேதி, தனுஷ் 55 படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அப்போது வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில்….

கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்தின் அடுத்த தயாரிப்பு : டி55
தனுஷ் நடிப்பில், இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி எழுதி இயக்குகிறார்.

கோபுரம் பிலிம்ஸ் நிறுவனம், தங்களது ஏழாவது திரைப்படத்தை அறிவிப்பதில் பெருமை கொள்கிறது. ஜி.என்.அன்புசெழியன் வழங்கும் டி 55 திரைப்படத்தில், தேசியவிருது நாயகன் தனுஷ் நடிக்கின்றார். இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி எழுத்து இயக்கத்தில் உருவாகும் இந்தத் திரைப்படம், ஒரு அற்புதமான சினிமா அனுபவமாக இருக்கும்.

தனது “ராயன்” திரைப்படத்தின் பிளாக்பஸ்டர் வெற்றியைத் தொடர்ந்து, நடிகர் தனுஷ் டி55 இல் களமிறங்குகிறார். இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி, திரைக்கதை, இயக்கத்தில் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியான “அமரன்” படம் அனைவரது பாராட்டுகளைக் குவித்து, பெரு வெற்றி பெற்றுள்ளது.

அதே போல டி55 படத்திலும் தனது தனித்துவமான கதை மூலம், இரசிகர்களை மகிழ்விக்கவுள்ளார்.

டி55 படத்தின் தயாரிப்பாளர் சுஸ்மிதா அன்புசெழியன் கூறுகையில்..,

தனுஷ் சார் மற்றும் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமியுடன் இணைந்து பணியாற்றுவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். அற்புதமான திறமைமிக்க, இந்த இருவரின் கூட்டணியில், இப்படம் ஒரு தலைசிறந்த படைப்பாக இருக்கும் என்றார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

அப்போதிருந்து இந்தப்படத்துக்கான முன் தயாரிப்பு வேலைகள் நடந்து கொண்டிருந்தன.தொழில்நுட்பக் கலைஞர்கள் எல்லாம் ஒப்ப்ந்தம் செய்யப்பட்டு அவர்களுக்கெல்லாம் முன்பணம் கொடுக்கப்பட்டது.

இப்படத்தில் கதாநாயகியாக சாய்பல்லவி நடிப்பார் என்று செய்திகள் வெளியாகின.

இந்நிலையிலேயே இப்படத்தின் இணைய ஒளிபரப்பு உரிமையைப் பெற்றுக் கொள்வதாகவும் அதற்காக சுமார் ஐம்பது கோடி கொடுப்பதாக நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் ஒப்புக்கொண்டதாகவும் தகவல் வெளியாகி வியப்பை ஏற்படுத்தியது.

இவை ஒருபுறம் நடந்து கொண்டிருக்க இன்னொரு புறம், படத்தின் மொத்தச் செலவுத் தொகை குறித்து இயக்குநருக்கும் தயாரிப்பாளருக்குமிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாம்.

இந்தப்படத்தின் மொத்த வியாபாரம் இவ்வளவுதான் இருக்கும் அதற்குள் மொத்த வேலைகளையும் முடிக்க வேண்டும் என்று தயாரிப்பாளர் தரப்பில் சொல்லப்பட்டதாம்.

அதற்கு,இந்தப்படத்தில் நான் கேட்பதை எல்லாம் செய்து கொடுங்கள்,கடைசியில் எவ்வளவு ஆனாலும் அதைவிட அதிகமாக வியாபாரம் செய்யலாம்.அந்த அளவுக்கு என் படத்தின் மீது நம்பிக்கை இருக்கிறது என்று சொல்லியிருக்கிறார்.அமரன் படம் வெற்றியடைந்த தெம்பில் இப்படிப் பேசியிருக்கிறார்.

இந்தப் பேச்சுகள் நடந்து கொண்டிருந்தபோதே இப்படத்தில் ஒரு முதன்மையான வேடத்தில் நடிக்க நடிகர் மம்முட்டியை அணுகியிருக்கிறார் இயக்குநர்.கதை கேட்டு நடிப்பதாக ஒப்புக் கொண்ட அவர், சம்பளமாக சுமார் 15 கோடி கேட்டிருக்கிறார்.அவ்வளவு சம்பளம் கொடுக்க முடியாதென தயாரிப்புத் தரப்புச் சொல்லியிருக்கிறது.அவர்தான் வேண்டுமென இயக்குநர் பிடிவாதமாக இருந்திருக்கிறார்.

இதனால், தயாரிப்பாளர் அன்புச்செழியன் இந்தப்படத்தை எடுக்கமுடியாது என்று கறாராகச் சொல்லிவிட்டாராம்.

செய்தியறிந்த தனுஷ்,இருவரையும் சமாதானப்படுத்த முயற்சியெடுத்திருக்கிறார்.அவையும் பலனளிக்கவில்லை.

இப்போது, இந்தப்படத்தை நானே தயாரிக்கிறேன் என்று தனுஷ் கேட்டிருக்கிறாராம்.இது தொடர்பான பேச்சுகள் நடந்து கொண்டிருக்கின்றனவாம்.

என்ன நடக்கும் என்பது இன்னும் சில நாட்களில் தெரிந்துவிடும் என்கிறார்கள்.

Related Posts