சினிமா செய்திகள்

நாடார் சாதிக்குள் நடந்த சண்டை – உலகம்மை திரைப்பட பரபரப்பு

விஜய் பிரகாஷ் இயக்கத்தில் இளையராஜாவின் இசையில் உருவாகியுள்ள ‘உலகம்மை’, திருநெல்வேலியை மையமாகக் கொண்ட விறுவிறுப்பான வாழ்வியல் திரைப்படம்.

‘சாதி சனம்’, ‘காதல் எஃப்.எம் ஆகிய படங்களின இயக்குநர் விஜய் பிரகாஷ், எழுத்தாளர் சு.சமுத்திரத்தின் பிரபலமான நாவலான ‘ஒரு கோட்டுக்கு வெளியே’-வை அடிப்படையாகக் கொண்டு ‘உலகம்மை’ படத்தை எடுத்துள்ளார்.
டிஜிட்டல் சினிமா அகாடமி பேனரில் டாக்டர் வீ.ஜெயப்பிரகாஷ் இப்படத்தைத் தயாரித்துள்ளார்.

நெல்லை மாவட்டப் பின்னணியில் 1970-களில் கதை நடக்கிறது. ’96’ புகழ் கவுரி கிஷன் மற்றும் வெற்றி மித்ரன் ஆகியோர் முன்னணி வேடங்களில் நடித்துள்ள ‘உலகம்மை’ படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார்.

நடிகர்கள் மாரிமுத்து, ஜி.எம்.சுந்தர்,பிரணவ் அருள்மணி, காந்தராஜ், ஜேம்ஸ்,சாமி,ஜெயந்திஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த விஜய் பிரகாஷ், தான் கல்லூரி நாட்களிலேயே சு.சமுத்திரத்தின் கதைகளால் ஈர்க்கப்பட்டதாக்க கூறுகிறார்.

“அதுவும் ‘ஒரு கோட்டுக்கு வெளியே’ நாவல் எனக்குள் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. எனவே, அதைத்திரைப்படமாக எடுக்க நான் விரும்பினேன் என்கிறார்.

உலகம்மை என்ற கிராமத்துப் பெண்ணைச் சுற்றி கதை நகர்கிறது. மாரிமுத்து நாடார் மற்றும் பலவேச நாடார் உலகம்மை மற்றும் அவரது தந்தை மாயாண்டி நாடாரை பழிவாங்குகிறார்கள். அந்தக் காலத்தில் நிலவிய சாதி அமைப்பை உலகம்மை எப்படி எதிர்க்கிறாள் என்பதைப் படம் சித்தரிக்கிறது.

சமூக வாழ்வியல் திரைப்படமான உலகம்மையின் முக்கிய அம்சங்களில் இளையராஜா இசையமைத்த நான்கு பாடல்களும் பின்னணி இசையும் அடங்கும்.

பேராசிரியர் குபேந்திரன் வசனம் எழுதியுள்ளார், கே வி மணி ஒளிப்பதிவு செய்துள்ளார், சுரேஷ் அர்ஸ் படத்தொகுப்பாளராகவும்வீர சிங்கம் கலை இயக்குநராகவும் பங்காற்றியுள்ளனர்.

பாடல் வரிகளை இளையராஜா, முத்துலிங்கம், சரவணன் ஆகியோர் எழுதியுள்ளனர்.

மே மாதம் உலகம்மை திரைப்படத்தை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

நாடார் சாதிப்பெயரைக் குறிப்பிட்டு எடுக்கப்பட்டுள்ள படம் என்பதால் படத்தைப் பலர் பரபரப்புடன் எதிர்பார்க்கின்றனர்.

Related Posts