இயக்குநர் ஷங்கர் இந்தியன் 2 வை அப்படியே விட்டுவிட்டு முதல்வன் 2 படத்தைத் தொடங்கத் திட்டமிடுகிறாராம். இந்தப்படத்தைத் தயாரிக்க சன் பிகசர்ஸ் நிறுவனம் முன்வந்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது. அதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றனவாம். முதல்வன் 2 படத்தின் நாயகன் விஜய். அவர் அட்லீ ,லோகேஷ் ஆகியோரது
தெலுங்கு முன்னணி நடிகர்களில் ஒருவர் அல்லுஅர்ஜூன். இவர் நடித்த சில படங்கள் தமிழில் குரல்பதிவு செய்யப்பட்டு வெளியாகியிருக்கின்றன. ஆனாலும் இவருக்கு நேரடித் தமிழ்ப்படத்தில் நடிக்க வேண்டும் என்பது நீண்டநாள் ஆசை. அதற்காகப் பல இயக்குநர்களோடு பேசி வந்திருக்கிறார். இதுவரை சரியாக அமையவில்லை. ஞானவேல்ராஜா தயாரிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் நேரடித் தமிழ்ப்படமொன்றில் அல்லுஅர்ஜூன்
திருடன் போலிஸ், உள்குத்து ஆகிய படங்களை இயக்கிய கார்த்திக்ராஜு மூன்றாவதாக இயக்கியிருக்கும் படம் கண்ணாடி. சந்தீப்கிஷன்,அன்யா சிங், கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு ஜூலை 1 அன்று நடைபெற்றது. நிகழ்வில் இயக்குநர் கார்த்திக் ராஜு பேசும்போது:- உள்குத்து படம் சரியாகப் போகவில்லை. இதுபற்றி என் நண்பர்களுடன் கலந்தாலோசிப்பேன். அப்போது தான்
எச்.வினோத் இயக்கத்தில் அஜீத் நடித்திருக்கும் படம் நேர்கொண்டபார்வை. இந்தியில் வெளியாகி வெற்றி பெற்ற பிங்க் படத்தின் தமிழாக்கம் இது. நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் தயாரித்திருக்கும் இப்படம் ஆகஸ்ட் 10 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் அப்படத்தின் வியாபாரத்தில் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது. அஜீத்தின் முந்தைய படம்
1991 ஆம் ஆண்டு வெளியான பாரதிராஜாவின் புதுநெல்லு புதுநாத்து படத்தில் வில்லனாக அறிமுகமாகி அதன்பின்னர் கதாநாயனாக உயர்ந்தவர் நெப்போலியன். திரைத்துறை மட்டுமின்றி அரசியலிலும் நுழைந்து சட்டமன்ற உறுப்பினர், பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் மத்திய அமைச்சர் ஆகிய பொறுப்புகளையும் வகித்தவர். தற்போது அமெரிக்காவில் குடியேறியிருக்கும் அவர் ஹாலிவுட் படங்களில் நடிக்கத் தொடங்கியிருக்கிறார்.
அறிமுக இயக்குநர் மகாசிவன் இயக்கத்தில் அறிமுக நாயகன் அரிசங்கர், அறிமுக நாயகி மோனிகா ஆகியோர் நடித்திருக்கும் படம் தோழர் வெங்கடேசன். எளிய, நடுத்தர வர்க்கக் குடும்பத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவருடைய வாழ்வில், ஒரு விபத்து, அதோடு தொடர்புடைய சட்டச் சிக்கல்கள் எந்த விதமான தாக்கங்களையும், வலிகளையும், வேதனைகளையும், பின்னடைவுகளையும் ஏற்படுத்துகிறது என்பதைத் தெளிவாகப் படம் பிடித்துக்
கிரீடம்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் விஜய். தயாரிப்பாளர், நடிகர் ஏ.எல்.அழகப்பனின் மகன் இவர். ‘மதராசப்பட்டினம்’, ‘தெய்வத்திருமகள்’, ‘தலைவா’, ‘சைவம்’, ‘தேவி’, ‘வனமகன்’ உள்ளிட்ட ஏராளமான படங்களை இயக்கியுள்ளார். நடிகை அமலாபாலுடன், 2014-ம் ஆண்டு ஜூன் 7-ம் தேதி கேரளாவில் நிச்சயதார்த்தமும், 12-ம் தேதி சென்னையில் திருமணமும் நடைபெற்றது. இந்தத் திருமண உறவு இரண்டு
விஜய்யின் பிகில் படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார் அட்லீ. இப்படத்தின் படப்பிடிப்பு பெரும்பகுதி முடிவடைந்துவிட்டது. 2019 தீபாவளி நாளில் இப்படம் திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதற்காகத் தீவிரமாக வேலை பார்த்துக் கொண்டிருப்பதற்கு மத்தியில் அட்லி, இந்தி நடிகர் ஷாருக்கானை சந்தித்திருக்கிறார். பிகில் படத்தில் ஷாருக்கான் ஒரு சிறிய வேடத்தில் நடிக்கவிருக்கிறார் என்று
எம் 10 புரொடக்ஷன் சார்பில் எம்.எஸ்.முருகராஜ் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘பக்ரீத்’. இதில் விக்ராந்த் நாயகனாகவும் வசுந்தரா நாயகியாகவும் நடித்திருக்கிறார்கள். மேலும் ரோகித் பதாக் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஒட்டகத்தை மையமாக வைத்து உருவாகி இருக்கும் இப்படத்தை இயக்கியதோடு மட்டுமில்லாமல் ஒளிப்பதிவும் செய்திருக்கிறார் ஜெகதீசன் சுபு. டி.இமான் இப்படத்திற்கு
தமிழில் அவ்வப்போது வெளியாகும் அரசியல் நையாண்டிப் படங்களின் வரிசையில் சேரக்கூடிய வகையில் வந்திருக்கிறது தர்மபிரபு. சமகால அரசியல் நிகழ்வுகளை எமலோகத்தைப் பின்னணியாக வைத்துக்கொண்டு கடுமையாக விமர்சித்திருக்கிறார்கள். எமதர்மராஜாவாக இருக்கும் ராதாரவி, பல்லாயிரம் ஆண்டுகள் ராஜாவாக இருந்ததில் சோர்வாகி தனக்கு அடுத்து, தன் அமைச்சரவையில் இருக்கும் வெறொருவரை எமதர்மராஜாவாக நியமிக்க




















