Uncategorized சினிமா செய்திகள்

காயமடைந்த தொழிலாளி நேரில் வந்த விஜய்

நடிகர் விஜய் நடிக்கும் 63 ஆவது படத்தை அட்லீ இயக்குகிறார். இந்தப் படம் கால்பந்து ஆட்டத்தை மையமாகக் கொண்ட கதை என்று கூறப்படுகிறது.

இந்தப் படத்தின் படப்பிடிப்புக்காக பூந்தமல்லியை அடுத்த செம்பரம்பாக்கத்தில் உள்ள ஈ.வி.பி. பிலிம் சிட்டியில் பிரமாண்டமான அரங்கு அமைக்கும் பணி நடந்து வருகிறது.

ஏராளமான ஊழியர்கள் இரவு பகலாக இந்தப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு 100 அடி உயரத்தில் கிரேனில் அதிக திறன்கொண்ட மின்விளக்குகள் அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. இந்த பணியில் சென்னை சாலிகிராமத்தை சேர்ந்த எலக்ட்ரீசியன் செல்வராஜ்(வயது 52) என்பவர் ஈடுபட்டு வந்தார்.

அப்போது எதிர்பாராதவிதமாக 100 அடி உயரத்தில் கிரேனில் கட்டப்பட்டு இருந்த மின்விளக்கு கழன்று, கீழே நின்று கொண்டிருந்த செல்வராஜ் தலையில் விழுந்தது. இதில் படுகாயம் அடைந்த அவர், மயங்கினார்.

இதனால் பதறிப்போன சகஊழியர்கள் செல்வராஜை மீட்டு போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

இந்தத் தகவல் அறிந்ததும் நடிகர் விஜய், மருத்துவமனைக்கு நேரில் சென்று செல்வராஜிடம் நலம் விசாரித்தார். அவரது குடும்பத்தினருக்கு ஆறுதலும் தெரிவித்தார்.

நடிகர் விஜய் நேரில் வந்த நிகழ்வு திரைப்படத் தொழிலாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

Related Posts