சினிமா செய்திகள் நடிகை

நினைத்தது நடக்கவில்லை? – காயத்ரி ரகுராம் ஏமாற்றம்

நடிகை நடன இயக்குநர் மற்றும் பிக்பாஸ் புகழ் காயத்ரி ரகுராம், தயாரித்து இயக்கியுள்ள படம் யாதுமாகி நின்றாய்.

இந்தப்படத்தில், நிவாஸ் ஆதித்தன், லதாபாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலரோடு காயத்ரி ரகுராமும் நடித்திருக்கிறார்.

அஷ்வின்விநாயகமூர்த்தி என்பவரது இசையில் தனுஷ் ஒரு பாடல் பாடியிருக்கிறார்.

இந்தப்படம் முழுமையாகத் தயாராகிவிட்டதாம்.

2017 ஆம் ஆண்டுக்கான தேசியவிருதை இப்படத்துக்கு வாங்கிவிடவேண்டும் என்று முயன்றிருக்கிறார் காயத்ரிரகுராம். அவர் பாஜக வில் இருப்பதால், நிச்சயம் வாங்கிவிடலாம் என்று நம்பி விண்ணப்பித்திருக்கிறார்.

விண்ணப்பித்துவிட்டு டில்லியில் இது தொடர்பான முயற்சியில் ஈடுபட்டதாகச் சொல்லப்படுகிறது.

ஆனால், தேசியவிருதுக்காக தமிழ்ப்படங்களைத் தேர்வு செய்யும் தமிழகக்குழுவே அந்தப்படத்தை நிராகரித்துவிட்டதாம்.

இந்தவிசயம் தெரிந்து காயத்ரி ரகுராம் மிகவும் ஏமாற்றமும் கோபமும் அடைந்தார் என்கிறார்கள்.

Related Posts