சினிமா செய்திகள்

அதிரடியாகச் சம்பளத்தை உயர்த்திய சத்யராஜ்

நடிகர் சத்யராஜ், இப்போது தமிழை விட அதிகமாக தெலுங்கில் அதிகமாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

தொடக்கத்தில் ஒரு படத்துக்கு இவ்வளவு சம்பளம் என்று வாங்கிக் கொண்டிருந்த சத்யராஜ், பாகுபலி படத்தில் நடித்த போது, ஒரு நாளைக்கு இரண்டு இலட்சம் சம்பளம் வாங்கினார்.

அப்படத்தின் இரண்டு பாகங்களின் படப்பிடிப்பும் சுமார் ஓராண்டு வரை நடைபெற்றது. அதற்காக அவர் எவ்வளவு சம்பளம் பெற்றிருப்பார் என்று கணக்குப் போட்டுக் கொள்ளுங்கள்.

பாகுபலி படத்துக்குப் பிறகு தெலுங்கில் சத்யராஜுக்கு ஏகப்பட்ட வரவேற்பு. நிறையப் படங்களில் அவரை நடிக்க வைக்க முயல்கின்றனர். ஒருசில படங்கள்தான் அவர் ஒப்புக்கொள்கிறார்.

ஏப்ரல் 19 அன்று நானி நாயகனாக நடித்து வெளியான ஜெர்சி படம் அமோக வரவேற்புடன் ஓடிக்கொண்டிருக்கிறது. அந்தப்படத்திலும் சத்யராஜின் வேடத்துக்கு மிக நல்ல பெயர்.

இதன்விளைவு, சத்யராஜ் தன் சம்பளத்தை அதிரடியாக உயர்த்திவிட்டாராம்.

இப்போது அவர் ஒரு நாளைக்குப் பத்து இலட்சம் கேட்கிறாராம். அப்போதும் அவரை ஒப்பந்தம் செய்யக் காத்திருப்போர் பட்டியல் குறையவில்லையாம்.

Related Posts