அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் – கொடுத்த பணம் வீண் ரசிகர்கள் ஏமாற்றம்
அவெஞ்சர்ஸ் வரிசைப் படங்களுக்கு உலகம் முழுவதும் நல்ல வரவேற்பு உள்ளது. இதுவரை வந்த அனைத்து அவெஞ்சர்ஸ் படங்களுமே வசூல் சாதனைகள் நிகழ்த்தி உள்ளன.
இந்த வரிசையில் ‘அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்’ படம் இந்தியா முழுவதும் தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் இன்று வெளியாகியிருக்கிறது.
இதில் ராபர்ட் டவுனி ஜூனியர், கிரிஷ் ஹேம்ஸ்வொர்த், மார்க் ரூபலோ, கிறிஸ் எவான்ஸ் உள்பட பலர் நடித்துள்ளனர். ஆண்டனி ரூசோ, ஜோ ரூசோ இயக்கி உள்ளனர்.
இந்தப் படத்தின் தமிழ் பதிப்புக்கான வசனங்களை இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் எழுதி உள்ளார். இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் ஒரு பாடலை உருவாக்கி உள்ளார். நடிகர் விஜய் சேதுபதி அயன்மேனுக்கும், ஆண்ட்ரியா பிளாக் விடோ கதாபாத்திரத்துக்கும் தமிழில் குரல்பதிவு உள்ளனர்.
உலகம் முழுவதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள இந்தப் படம் இன்று திரைக்கு வரும் நிலையில் இதன் தமிழ்ப் பதிப்பு இணையதளத்தில் ஒரு நாள் முன்னதாகவே வெளியாகிவிட்டது. இது படக்குழுவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் அடுத்த அதிர்ச்சியாக, இன்று காலையில் பெங்களூருவில் படம் பார்த்த பலரும், இந்தப்படம் முந்தைய படங்களைப் போல் இல்லை. பெரும் எதிர்பார்ப்புடன் வந்து ஏமாந்துவிட்டோம் என்று ரசிகர்கள் புலம்புகின்றனர். கொடுத்த பணம் வீண் என்றும் சொல்கின்றனர்.











