Home Articles posted by cadmin (Page 451)
சினிமா செய்திகள்

காப்பான் ரிலீஸ் தேதி அறிவிப்பு – சூர்யா ரசிகர்கள் கொண்டாட்டம்

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா,சாயிஷா, ஆர்யா, மோகன்லால் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் “காப்பான்”. ஹாரிஸ்ஜெயராஜ் இசையமைத்துள்ளார். இப்படத்தின் இசை வெளியிட்டு விழா சென்னை திருவான்மியூரில் ஜூலை 21 ஆம் தேதி நடைபெற்றது. இப்படத்தில் நடிகர் மோகன்லால் பிரதமராக நடிக்கிறார்.அவருடைய பாதுகாப்பு அதிகாரியாக
சினிமா செய்திகள்

அதிரடி ஆரம்பம் – கமல் படத்தில் வடிவேலு

இம்சை அரசன் 24 ஆம் புலிகேசி படத்தின் தயாரிப்பாளர் இயக்குநர் ஷங்கருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக படங்களில் நடிக்காமல் இருக்கிறார் நடிகர் வடிவேலு. இந்தச் சிக்கலில் சுமுக முடிவு ஏற்பட்டதைத் தொடர்ந்து மீண்டும் படங்களில் நடிக்கவிருக்கிறார் வடிவேலு. இந்தமுறை அவர் ஒரு பெரிய படத்தில் நடிக்கவிருக்கிறாராம். ஆம், கமல் இயக்கி நடிக்கவிருக்கும் தேவர்மகன் 2 படத்தில் அவர்
செய்திக் குறிப்புகள்

சேரன் விவகாரம் – விஜய்சேதுபதிக்கு திடீர் கோரிக்கை

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இயக்குநர் சேரன் கலந்துகொண்டிருக்கிறார். அது தொடர்பாக இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் விடுத்துள்ள சைய்திக்குறிப்பில்….. அண்ணன் சேரன் அவர்கள் இயக்குனர் நடிகர் என்பதையும் தாண்டி, தங்கள் குடும்பத்தில் ஒருவராக தமிழக மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டவர். ஆட்டோகிராபில் வேற்று மாநிலத்தவர்களால் அவமானப்படுத்தப்பட்ட போதும், சொல்ல மறந்த கதையில் தன் மாமனாரால்
செய்திக் குறிப்புகள்

விஜய் திருமண மண்டபத்தில் விஜயசேதுபதி படம்

தயாரிப்பாளர் லலித்குமாரின் 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் மற்றும் வயகாம் 18 ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கும் படம் துக்ளக் தர்பார். விஜய்சேதுபதி கதாநாயகனாக நடிக்கிறார். அதிதிராவ் ஹெய்தாரி நாயகியாக நடிக்கிறார். இயக்குநரும் நடிகருமான ரா.பார்த்திபன் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஏற்கெனவே விஜய்சேதுபதி பார்த்திபன் கூட்டணி நானும் ரவுடி தான் படத்தில் மக்களை மிகவும்
சினிமா செய்திகள்

பிக்பாஸ் – இயக்குநர் சேரனுக்கு ஆதரவும் எதிர்ப்பும்

நடிகர் கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் 3 நிகழ்ச்சி 40 நாட்களைக் கடந்து ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கின்றது. இரண்டாவது வாரத்தின் இறுதியில் முதல் ஆளாக பாத்திமா பாபு வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார். அவரைத் தொடர்ந்து அடுத்தடுத்து வனிதா விஜயகுமார், மோகன் வைத்யா, மீராமிதுன் உள்ளிட்டோர் வெளியேற்றப்பட்டனர். இந்நிலையில், சில நாட்களாக நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள இயக்குநர்
விமர்சனம்

ஜாக்பாட் – திரைப்பட விமர்சனம்

மணிமேகலைக் காப்பியத்தில், அட்சயபாத்திரம் என்றும் அமுதசுரபி என்றும் அழைக்கப்படும் ஒரு பாத்திரம் இருக்கிறது. அள்ள அள்ளக் குறையாமல் அமுதம் வரும் என்பது அதன் சிறப்பு. அந்தப்பாத்திரம் 2019 ஆம் ஆண்டு ஒருவர் கையில் கிடைத்தால், அவர், ஆற்றுநர்க்கு அளிப்போர், அறவிலை பகர்வோர், ஆற்றா மாக்கள் அரும்பசி களைவோர் மேற்றே உலகின் மெய்ந்நெறி வாழ்க்கை. மண்திணி ஞாலத்து வாழ்வோர்க் கெல்லாம் உண்டி
சினிமா செய்திகள்

நேர்கொண்டபார்வை – தமிழக விநியோகஸ்தர்கள் மற்றும் விலை விவரம்

நேர்கொண்டபார்வை படத்தின் தயாரிப்பாளர் போனிகபூர், அப்படத்தின் தமிழக திரையரங்கு விநியோக உரிமையை எஸ் பிக்சர்ஸ் ஜி.சீனிவாசன், கே.ராஜமன்னார் மற்றும் ராகுல் ஆகியோர் பெற்றுள்ளனர் என்று கூறியுள்ளார். இவர்களில் ஜி.சீனிவாசன் மற்றும் ராஜமன்னார் ஆகியோர் பிரபல விநியோகஸ்தர்கள். நடிகர் அஜீத்தே பரிந்துரை செய்தார் என்பதால் ராகுல் என்பவருக்கு அந்த உரிமையில் பங்கு வழங்கப்பட்டுள்ளது என்று
விமர்சனம்

தொரட்டி – திரைப்பட விமர்சனம்

தொரட்டி என்பது ஆடுகளுக்கு தழை (உணவு) ஒடிக்கப் பயன்படும் கூர் அருவாவின் பெயர். அப்பெயரில், ஊர் ஊராகச் சென்று ஆட்டுக்கிடை போட்டு வாழும் மக்களைக் கதை மாந்தர்களாகக் கொண்டு உருவாகியிருக்கிறது இப்படம். நாயகனாக நடித்திருக்கும் ஷமன் மித்ருவின் பாத்திரம், நாயகன் என்பதற்கான இலக்கணங்களை உடைத்து எதார்த்த இளைஞனைப் பிரதிபலிக்கிறது. அவ்வேடத்துக்கு பொருத்தமாக நடித்திருக்கிறார். நின்று
சினிமா செய்திகள்

அஜீத் பரிந்துரை – நேர் கொண்ட பார்வை வியாபாரத்தில் திடீர் திருப்பம்

எச்.வினோத் இயக்கத்தில் அஜீத் நடித்துள்ள நேர்கொண்டபார்வை படம் ஆகஸ்ட் எட்டாம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் இப்படத்தின் வியாபாரம் முடிவடையாமல் இழுத்துக் கொண்டிருந்தது. பட நிறுவனம் சொல்லும் விலைக்கு வாங்க எல்லோரும் பயப்பட்டதுதான் இதற்குக் காரணம் என்கிறார்கள். இந்நிலையில் ஜூலை 31 அன்று, ஜெமினி நிறுவனம் இப்படத்தின் உரிமையைப் பெற்றுவிட்டது என்று