தெலுங்கின் முன்னணி நடிகர் சிரஞ்சீவி நடித்துள்ள சைரா நரசிம்ம ரெட்டி படம் அக்டோபர் 2 ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. அதையொட்டி ஆனந்தவிகடன் வார ஏட்டுக்கு அவர் அளித்துள்ள சிறப்புப் பேட்டியின் சிறு பகுதி….. விஜய்சேதுபதி பற்றி…. நரசிம்மரெட்டி வாழ்க்கையில அவருக்கு ஆதரவா தமிழ் நாட்டுல இருந்து
2001 ஆம் ஆண்டு வெளியானது அஜீத் நடித்த தீனா படம்.அதன் மூலம் தமிழ்த்திரையுலகுக்கு இயக்குநராக அறிமுகமானவர் ஏ.ஆர்.முருகதாஸ், முதல்படமே வெற்றி என்பதால் அவருக்கு நிறைய மதிப்பு மட்டுமின்றி எல்லாக் கதாநாயகர்களுமே அவருடன் பணியாற்ற விருப்பம் தெரிவித்தனர். முருகதாஸின் இரண்டாவது பட நாயகன் விஜயகாந்த். இருவரும் இணைந்த ரமணா படம், மருத்துவத்துறையின் அநியாயங்கள் பற்றிச் செய்திகள்
அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் பிகில் படத்தின் படப்பிடிப்பு மொத்தமும் முடிவடைந்து அதற்குப் பிறகான வேலைகள் நடப்பதாகச் சொல்லப்பட்டிருக்கிறது. அண்மையில் அப்படத்தின் பாடல்கள் வெளியீட்டுவிழாவின் போதும் படப்பிடிப்பு முழுமையாக முடிந்துவிட்டதாகச் சொல்லப்பட்டது. ஆனால், படத்தில் விஜய்யின் அறிமுகக் காட்சியையொட்டி ஏராளமான கல்லூரி மாணவர்கள் மற்றும் காவல்துறையினர் இடம்பெறுவது
வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள அசுரன் படம் அக்டோபர் 4 ஆம் தேதி வெளியாகும் என்று சொல்லப்படுகிறது. இநதப்படத்தின் கதை தமிழகத்தின் தென்மாவட்டங்களில் நடக்கிறது. இப்படத்துக்கான குரல்பதிவை தனுஷ் முடிக்கவில்லை. அதற்குள் கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் புதிய படத்தில் நடிப்பதற்காக இலண்டன் சென்றுவிட்டார் தனுஷ். இதனால் அசுரன் படக்காட்சிகளை இலண்டனுக்குக் கொண்டு சென்று தனுஷின்
கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள காப்பான் படம் செப்டம்பர் 20 ஆம் தேதி வெளியானது. அப்படம் வரவேற்பு மற்றும் விமர்சனங்களை ஒருசேரச் சந்தித்து வருகிறது. அப்படம் குறித்து வெளியான பல்வேறு விமர்சனங்களுக்கு அவ்வப்போது விளக்கம் கொடுத்து வருகிறார் படத்தின் கலை இயக்க்நரும் நடிகருமான கிரண். அவர் கூறியிருக்கும் விளக்கங்கள்….. விமர்சனம் செய்வது என்பதே தவறு.. அதிலும்
Kavalthurai Ungal Nanban New Tamil Movie Official Teaser 2019. Banner: BR Talkies Corporations & White Moon Talkies Distribution: Libra Productions – Ravindhar Chandrasekaran Producer: Bhaskaran B, Rajapondiyan P, Suresh Ravi Starring: Suresh Ravi, Raveena Ravi, Mime Gopi, Super Good Subramani , RJ Munna, Sharath Ravi Director: RDM Cinematography: K.S.Vishnu
2010 ஆம் ஆண்டு வெளியான தமிழ்ப்படம் மூலம் நகைச்சுவை நடிகராக அறிமுகமானவர் சதீஷ். இப்போது சிவகார்த்திகேயன், விஜய் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்கள் உட்பட ஏராளமான படங்களில் நடித்து வருகிறார். அவர் நேற்று (செப்டம்பர் 20,2019) தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தன்னுடைய திருமண உறுதி நிகழ்வு புகைப்படங்களைப் பகிர்ந்திருந்தார். பெண் யார்? என்பது உட்பட எவ்வித விவரங்களையும் அவர்
பிகில் படத்தின் கதை என்னுடையது என்று சிட்டி சிவில் நீதிமன்றத்தில் கே.பி.செல்வா என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். இது தொடர்பாக ஆகஸ்ட் 25 ஆம் தேதி படத்தைத் தயாரிக்கும் ஏஜிஎஸ் நிறுவனம் வெளியிட்ட நீண்ட செய்திக்குறிப்பின் ஒரு பகுதியில், வழக்கைத் திரும்பப் பெற அனுமதி தந்த நீதிமன்றம் இதே காரணத்தின் பேரில் புதிய வழக்குத் தொடுக்க உரிமை வழங்க மறுத்து விட்டது. முடிவில், வழக்கை வாபஸ்
இயற்கை விவசாயம் செய்து மண்ணைப் பாதுகாக்கும் விவசாயி, பிரதமரின் பாதுகாப்பு அதிகாரியாகப் பணியாற்றி நாட்டையும் பாதுகாப்பதால் இவர் காப்பான். இராணுவ உளவுப் பிரிவு, பிரதமரின் சிறப்புப்பாதுகாப்புப் பிரிவு தமிழக விவசாயி ஆகிய மூன்று பொறுப்புகளை ஏற்றிருக்கிறார் சூர்யா. மூன்றுக்கும் பொருத்தமாக இருக்கிறார் என்பதைப் புதிதாகச் சொல்ல வேண்டியதில்லை. இராணுவம் போல் விவசாயமும் ஒரு சேவை.
சின்னச் சின்ன தப்புகளைச் செய்து பணம் சம்பாதிக்கிறார்கள் நாயகன் துருவாவும் அவரது மாமா ஷாராவும். அதன் தொடர்ச்சியாக நாயகி இந்துஜாவைக் கடத்திப் பணம் பறிக்க முயல்கிறார்கள். பணம் கேட்கப்போகும்போது இந்துஜாவின் அப்பா கொல்லப்பட்டது கண்டு அதிர்ச்சி அடைந்து அது தொடர்பாகத் துப்புத்துலக்குகிறார் துருவா. அவருக்கு ஏன் இந்த வேண்டாத வேலை? நாயகியைப் பார்த்ததும் காதல் கொள்வதால் இந்த வேண்டாத




















