விஜய் நடிக்கும் பிகில் படம் அக்டோபர் 24 ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. படத்தின் பாடல்கள் வெளியீடு செப்டம்பர் 19 ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. அந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் விஜய், அப்படியே விமான நிலையம் சென்று வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ளவிருக்கிறாராம். குடும்பத்துடன் பத்து நாட்கள் ஓய்வுக்குப்
துருவங்கள் 16 படத்தின் மூலம் எல்லோராலும் கவனிக்கப்பட்ட இயக்குநர் கார்த்திக் நரேன். அதற்க்டுத்து இவர் இயக்கிய, ‘நரகாசூரன்’ படம் இன்னும் வெளியாகாமல் உள்ளது. அதற்கடுத்து நாடகமேடை எனும் படத்தை இயக்கப் போவதாக அறிவிப்பு வெளியானது. ஆனால், அதை அப்படியே வைத்துவிட்டு மாஃபியா எனும் படத்தைத் தொடங்கினார். அருண்விஜய், பிரியாபவானிஷங்கர் உள்ளிட்ட பலர் நடிக்கும் இப்படத்தின் டீசர்
இயக்குநரும் நடிகருமான பார்த்திபன் ராதாகிருஷ்ணன் தயாரித்து, எழுதி, இயக்கி, நடித்திருக்கும் திரைப்படம் ‘ஒத்த செருப்பு சைஸ் 7’. இந்தப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, ராம்ஜி ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இப்படத்தில் பார்த்திபன் ஒருவர் மட்டுமே நடித்துள்ளார். மற்ற கதாபாத்திரங்களின் குரல்கள் மட்டுமே கேட்கும். இப்படிப்பட்ட புதுமுயற்சியில் உருவாகியிருக்கும்
ரஜினிகாந்த் இப்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் தர்பார் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்தப்படத்துக்கு அடுத்து அவர் நடிக்கவிருக்கும் படத்தை முடிவு செய்யும் வேலைகள் தற்போது நடந்து கொண்டிருக்கின்றன. இயக்குநர் மற்றும் தயாரிப்பு நிறுவனத்தை இறுதி செய்யும் பணிகள் நடந்து கொண்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது. இந்நிலையில் ஒரு படத்தயாரிப்பு நிறுவனத்தின் தயாரிப்பில் நடிக்க விருப்பம்
இயக்குநர் ஷங்கர், 2012 ஆம் ஆண்டு வெளிநாட்டில் இருந்து ‘ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட்’ என்ற மகிழுந்தை இறக்குமதி செய்தார். இந்த மகிழுந்துக்கு நுழைவு வரியாக சுமார் ரூ.44 லட்சம் செலுத்திவிட்டு, வணிக வரித்துறை முதன்மை ஆணையரிடம் தடையில்லாச் சான்றிதழ் வாங்கி வந்தால் மட்டுமே, பதிவு செய்ய முடியும் என்று கே.கே.நகர் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் கூறினார். இதனால், சென்னை உயர்நீதிமன்றத்தில்
நடிகை நயன்தாரா தற்போது ரஜினியுடன் தர்பார், விஜய்யுடன் பிகில் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் அவர் நடிப்பில் உருவாக உள்ள 65 ஆவது படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. நயன்தாரா நடிக்க உள்ள அடுத்த திரைப்படத்திற்கு ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான “நெற்றிக்கண்” படத்தின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. மிலிண்ட் ராவ் இயக்க உள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு இன்று
ஜோக்கர், ஆண் தேவதை உள்ளிட்ட சில படங்களில் நடித்திருப்பவர் நடிகை ரம்யாபாண்டியன். அண்மையில் இவர் தன் வீட்டு மொட்டை மாடியில் எடுத்த புகைப்படங்களைப் பகிர்ந்திருந்தார். அவரே எதிர்பாராத அளவு அந்தப் புகைப்படங்களுக்கு அமோக வரவேற்பு கிடைத்தது. அதனால் உடனடியாகச் சில புதிய படங்களில் நடிக்கும் வாய்ப்பும் அவருக்குக் கிடைத்திருக்கிறது. இந்நிலையில் நேற்றிரவு அவர் தன்னுடைய ட்விட்டர்
அட்லீ இயக்கத்தில் விஜய் நடிக்கும் பிகில் படம் தீபாவளி வெளியீடு என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. தீபாவளி அக்டோபர் 27 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வருகிறது. அதனால் படத்தை இரண்டு நாட்கள் முன்னதாக வெள்ளிக் கிழமையே வெளியிடத் திட்டமிட்டிருந்தார்கள். இப்போது அதில் ஒரு மாற்றம் நடந்திருக்கிறதாம். இன்னும் ஒருநாள் முன்னதாக வியாழக்கிழமையே படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்திருக்கிறதாம்.
அஜித் நடித்த வாலி படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகிய எஸ்.ஜே.சூர்யா ‘நியூ’ மூலம் கதாநாயகன் ஆனார். தன்னுள் இருந்த இயக்குநரை ஓரம்கட்டி, நடிகரை புதுப்பித்துக்கொண்டு வருகிறார் எஸ்.ஜே.சூர்யா. மெர்சலில் விஜய்க்கு வில்லனாக மிரட்டியவர். இறைவி படத்தில் தன்னுள் இருந்த கலைஞனை வெளிக்கொண்டு வந்து அனைவரையும் ஆச்சர்யப்படுத்தினார். சமீபத்தில் ‘மான்ஸ்டர்’ என்று
பாதாள பைரவி, மாயாபஜார், மிஸ்ஸியம்மா, எம்.ஜி.ஆர் நடித்த – எங்கவீட்டு பிள்ளை, நம்நாடு, ரஜினிகாந்த் நடித்த உழைப்பாளி, கமலஹாசன் நடித்த நம்மவர் மற்றும் தாமிரபரணி, படிக்காதவன், வேங்கை, வீரம், விஜயின் பைரவா உட்பட 60 க்கும் மேற்பட்ட வெற்றிப்படங்களைத் தயாரித்த பட நிறுவனம் பி.நாகிரெட்டியின் விஜயா புரொடக்ஷன்ஸ். விஜயா புரொடக்ஷன்ஸ் சார்பில் பி.பாரதி ரெட்டி தயாரித்து வரும் படம்




















