சினிமா செய்திகள்

பிகில் படத்தில் விஜய் பாடிய பாடலும் கசிந்தது – படக்குழு அதிர்ச்சி

சர்கார் படத்துக்குப் பிறகு விஜய் நடிக்கும் படம் பிகில். அட்லி இயக்குகிறார். இதில் கதாநாயகியாக நயன்தாரா வருகிறார். விவேக், டேனியல் பாலாஜி, யோகிபாபு ஆகியோரும் உள்ளனர். பட வேலைகள் இறுதிகட்டத்தில் உள்ளன.

படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். இதில் விஜய் ஒரு பாடலைப் பாடி உள்ளார். இந்தப் பாடலை கடந்த வாரம் பதிவு செய்தனர். தீபாவளிக்குப் படம் திரைக்கு வர உள்ளது.

இந்த நிலையில் பிகில் படத்துக்காக ஏ.ஆர்.ரகுமான் பாடிய சிங்கப் பெண்ணே என்று தொடங்கும் பாடலை திருட்டுத்தனமாக யாரோ சமூக வலைத்தளத்தில் வெளியிட்டனர்.

இதைப் பலரும் பகிர, சிங்க பெண்ணே என்ற ட்விட்டர் ஹேஷ்டேக்கும் இந்திய அளவில் டிரெண்டானது. இது படக்குழுவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பாடல் வெளியானது எப்படி என்று விசாரணை நடத்திவந்தனர்.

இந்நிலையில் விஜய் பாடிய வெறித்தனம் என்கிற பாடலும் கசிந்திருக்கிறதாம். இதனால் படத்தின் தயாரிப்பு நிறுவனம் என்ன செய்கிறது? என்கிற விமர்சனத்தை முன்வைத்து மிக்சர் சாப்பிடும் அர்ச்சனா என்கிற ஹேஷ்டேக்கில் பலரும் பிகில் படத்தயாரிப்பு நிறுவனத்தை விமர்சனம் செய்துவருகின்றனர்.

Related Posts