February 12, 2025
சினிமா செய்திகள்

சர்கார் பட சர்ச்சையை முறியடிக்க ரஜினியின் 2 ஓ பட சர்ச்சை

ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்‌‌ஷய் குமார், ஏமி ஜாக்சன் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘2.0’. ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்துள்ளார். ‘எந்திரன்’ படத்தின் இரண்டாம் பாகமாக சுமார் 600 கோடி செலவில் இந்தப்படம் உருவாகி இருக்கிறது.

சமீபத்தில் வெளியாகிய இந்தப்படத்தின் டிரைலருக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கும் நிலையில், பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் படம் வருகிற நவம்பர் 29-ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

இந்த நிலையில், 2.0 படம் விரைவில் தமிழ்ராக்கர்ஸில் வெளியாகும், நவம்பர் மாத ரிலீஸ் என்று சினிமா படங்களை திருட்டுத்தனமாக வெளியிடும் தமிழ்ராக்கர்ஸ் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

அண்மையில் விஜய் நடிப்பில் வெளியாகி திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கும் சர்கார் படத்தையும் படம் வெளியான அன்றே வெளியிட்டு படக்குழுவுக்கு அதிர்ச்சியளித்தது.

இந்த நிலையில், 2.0 படமும் இணையதளத்தில் வெளியாகும் என்று அறிவித்துள்ளதால் சினிமா வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஒரு பக்கம் சர்கார் படம் குறித்த சர்ச்சைகள் பெரிதாகப் போய்க்கொண்டிருக்கும் நிலையில் அதிலிருந்து அனைவரையும் திசை திருப்பும் வண்ணம் இந்த அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

Related Posts