அதிரடி ஆரம்பம் – கமல் படத்தில் வடிவேலு
இம்சை அரசன் 24 ஆம் புலிகேசி படத்தின் தயாரிப்பாளர் இயக்குநர் ஷங்கருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக படங்களில் நடிக்காமல் இருக்கிறார் நடிகர் வடிவேலு.
இந்தச் சிக்கலில் சுமுக முடிவு ஏற்பட்டதைத் தொடர்ந்து மீண்டும் படங்களில் நடிக்கவிருக்கிறார் வடிவேலு.
இந்தமுறை அவர் ஒரு பெரிய படத்தில் நடிக்கவிருக்கிறாராம்.
ஆம், கமல் இயக்கி நடிக்கவிருக்கும் தேவர்மகன் 2 படத்தில் அவர் நடிக்கவிருப்பதாகச் சொல்லப்படுகிறது.
தேவர்மகன் படத்தில் வடிவேலு ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.அந்தப் படத்தில் நடிக்கிற நேரத்தில் இந்த அளவுக்குப் புகழ் பெறாத வடிவேலு, அந்தப்படத்தில் நடித்து பெரும்புகழ் பெற்றார்
இப்போது அப்படத்தின் இரண்டாம்பாகம் தயாராகிற நேரத்தில், படம் முழுக்க கமலுடன் வருகிற மாதிரி அவருக்கு ஒரு வேடம் அமைக்கப்பட்டிருக்கிறதாம்.
அதில் அவரை நடிக்கக் கேட்டு அணுகியபோது உடனே ஒப்புக்கொண்டாராம்.
இந்தியன் 2 படப்பிடிப்பு தொடங்கிய பின்பு இப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் அப்போது வடிவேலு நடிக்கிற செய்தி அறிவிக்கப்படும் என்றும் சொல்கிறார்கள்..











