சினிமா செய்திகள்

பிக்பாஸ் – இயக்குநர் சேரனுக்கு ஆதரவும் எதிர்ப்பும்

நடிகர் கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் 3 நிகழ்ச்சி 40 நாட்களைக் கடந்து ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கின்றது.

இரண்டாவது வாரத்தின் இறுதியில் முதல் ஆளாக பாத்திமா பாபு வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார். அவரைத் தொடர்ந்து அடுத்தடுத்து வனிதா விஜயகுமார், மோகன் வைத்யா, மீராமிதுன் உள்ளிட்டோர் வெளியேற்றப்பட்டனர்.

இந்நிலையில், சில நாட்களாக நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள இயக்குநர் சேரன் சர்ச்சையில் சிக்கியிருக்கிறார். மீராமிதுன் மற்றும் நடிகர் சரவணன் ஆகியோரால் அவருக்குக் கெட்டபெயர்.

இந்த நிலையில், சேரனுக்கு, இயக்குநர் வசந்த பாலன் கோரிக்கை ஒன்றை தன் முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.அதில்,

அன்புள்ள சேரன் சார் அவர்களுக்கு வணக்கம்!உங்களுக்கு இது கேட்காது என்று தெரியும்.காற்றின் ரகசியப் பக்கங்களில்
இந்த செய்தி ஊடேறி உங்களைத்தொடும் என்றே நம்புகிறேன்.

உங்களின் படங்களின் ரசிகனாய் சொல்கிறேன். வித்யாகர்வத்துடன்
நீங்கள் இருந்த இடம் மிக கம்பீரமானது.பருந்து பறக்கும்
வானத்தின் உயரத்தில் சஞ்சரிப்பவர் நீங்கள்.

பாரதிகண்ணம்மா,பொற்காலம்,ஆட்டோகிராப் என அற்புதமான இலக்கியப்படைப்புகள்.திரையில் இலக்கியம் செய்ய ஆசைப்பட்டு
அதில் வென்று காட்டியவர் நீங்கள்.

காலத்தின் கரையான் உங்களையும் உங்கள் படங்களையும் அழித்துவிடமுடியாது.இயக்குநர் மகேந்திரன்,இயக்குநர் பாலுகேந்திராவுடன் ஒப்பிடக்கூடிய திரை ஆளுமை நீங்கள்.

பிக்பாஸ் அரங்கில் இருப்பவர்களுக்கு உங்களின் உயரம் தெரியாது.
நீங்களும் நடிகர் சரவணனும் ஒன்று என்று தான் நினைப்பார்கள்.
அறியாமை என்ன செய்ய……

உடனே பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறுங்கள். இயக்குனர் சங்கப் பதவியில் கௌரவக்குறைவு ஏற்பட்ட போது
உடனே அதை விட்டு வெளியேறினீர்கள்.

ஆகவே கலைஞன் எந்த நிலையிலும் அவனின் மேன்மையை
எந்த கீழ்மைக்கும் உட்படவிடுதல் வேண்டாம்

இவ்வாறு வசந்த பாலன் எழுதியுள்ளார்.

வசந்தபாலன் மட்டுமின்றி பலரும் இந்தக் கருத்தையே கொண்டுள்ளனர். அரசுப்பள்ளி ஆசிரியரான செல்வம் என்பவர்,

தமிழ் சினிமாவில் தனிமுத்திரை பதித்த மனிதர்.அருமையான படைப்பாளி.ட்விட்டரில் எங்களோடு உரையாடும் எளிய மனிதர்
இயக்குநர் சேரன்.தகுதியற்ற இடத்தில் கால் வைத்துவிட்டதாகவே நினைக்கிறேன்.தன்னுடைய வாழ்வில் செய்த மிகப்பெரிய தவறு இது என்று அவரே ஒரு நாள் கூறுவார்

என்று ட்விட்ட்ரில் சொல்லியிருக்கிறார்.

அதற்கு பலர் ஆதரவு தெரிவித்திருக்கிறார்கள்.

ஒரு சிலர்,

எப்பேற்பட்ட மனிதரானாலும் பொறாமை, காழ்புணர்ச்சி கொண்ட மனிதர்களின் தாக்குதலில் இருந்து விலகிசெல்லமுடியாது.எதையும் பொறுமையுடன் கடந்து செல்லவேண்டும் என்பதை சேரன் சார் மூலம் உணர்ந்து கொள்ள வேண்டும்

இவ்வாறும் சொல்லி வருகிறார்கள்.

Related Posts