சினிமா செய்திகள்

பெரும் எதிர்ப்பிலிருந்து தப்பிய ஹாரிஸ்ஜெயராஜ்

உல்லாசம், விக்ரமாதித்யா, விசில் ஆகிய படங்களை இயக்கியவர்களும், சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனத்துக்காகப் பல விளம்பரப்படங்களை இயக்குபவர்களுமான ஜேடி – ஜெர்ரி ஆகியோர் இயக்கத்தில் சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் அருள் கதாநாயகனாக நடிக்கும் படம் 2019 டிசம்பர் 1 ஆம் தேதி தொடங்கியது.

இந்தப்படத்தில் புதுமுக நடிகை கீதிகா திவாரி என்பவர் நடிக்கிறார். நடிகர்கள் பிரபு, விவேக், விஜயகுமார், மயில்சாமி, நாசர், தம்பி ராமையா, காளி வெங்கட், கோவை சரளா உள்ளிட்ட பெரிய கூட்டம் இப்படத்தில் இருக்கிறது.

இப்படத்துக்கு ஹாரிஸ்ஜெயராஜ் இசையமைக்கிறார்.

மதன்கார்க்கி மற்றும் வைரமுத்து ஆகியோர் பாடல்களை எழுதுகிறார்கள்.

இப்படத்தில் இடம்பெறவிருக்கும் ஒரு பாடலைப் பாட அண்மையில் புகழ்பெற்றிருக்கும் சிங்களப் பாடகி யோகானியை அழைக்க முடிவு செய்திருக்கிறார்கள்.

இணையம் வழியாக அவரைத் தொடர்பு கொண்டு விசயத்தைச் சொன்னார்களாம். அதன்பின் அவரை சென்னைக்கு வரச் சொன்னபோது வரமுடியாது என்று மறுத்துவிட்டாராம். அதனால், இணையம் வழியாகக் காணொலிக் கலந்தாய்வு நடத்திவிட்டு அங்கிருந்தே பாடி அனுப்புங்கள் என்று கேட்டிருக்கிறார்கள்.

ஆனால், அவரோ கைபேசியில் அழைத்தாலும் எடுப்பதில்லை, இணையம் வழியாகவும் தொடர்புக்கு வரவில்லையாம்.

இதனால் வெறுத்துப்போன ஹாரிஸ்ஜெயராஜ், அவர் வேண்டாம் என்று முடிவு செய்துவிட்டாராம்.

நல்லவேளை அவர் தப்பினார், ஒரு சிங்களப்பாடகியைத் தமிழில் பாட வைத்திருந்தால் ஒட்டுமொத்த உலகத் தமிழர்களும் இப்படத்துக்கும் ஹாரிஸ்ஜெயராஜுக்கும் எதிராக மாறியிருப்பார்கள் என்றும் தமிழ்நாட்டிலும் பெரும் எதிர்ப்பைச் சந்தித்திருக்கவேண்டும் என்றும் சொல்கிறார்கள்.

Related Posts