லாரன்ஸ் ஓவியா நடிக்கும் காஞ்சனா 3 ரிலீஸ் தேதி வெளியானது
ராகவா லாரன்ஸ் எழுதி இயக்கி நடித்த படம் முனி 3 – காஞ்சனா 2 படம் கடந்த ஏப்ரல் மாதம் வெளியாகி சுமார் 100 கோடி வசூலை வாரிக் குவித்தது.
அதைத் தொடர்ந்து ராகவா லாரன்ஸ் இயக்கி நடிக்கும் முனி 4 காஞ்சனா 3 படம் தயாராகிவருகிறது. இப்படத்தில் ஓவியா, வேதிகா, கோவை சரளா உட்பட பலர் நடித்திருக்கிறார்கள்.
இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்து விட்டது..ஒரே ஒரு பாடல் காட்சியைத் தவிர.
மிகப் பிரமாண்டமான செலவில் உருவாகி உள்ள இப்படத்தின் மற்ற பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது..
இப்படம் ஏப்ரல் மாதம் 18 ஆம் தேதி திரைக்கு வர உள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.











