September 22, 2026
சினிமா செய்திகள்

விஸ்வாசம் செகண்ட்லுக் – புதுநடிகையின் வித்தியாச கருத்து

அஜித் நடிப்பில், சிவா இயக்கியுள்ள ‘விஸ்வாசம்’. நயன்தாரா நாயகியாக நடித்துள்ள இந்தப் படத்தில் விவேக், தம்பி ராமையா, ரோபோ சங்கர், யோகி பாபு, போஸ் வெங்கட், ரமேஷ் திலக் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரித்து வரும் ‘விஸ்வாசம்’ படத்துக்கு, டி.இமான் இசையமைக்கிறார். மதுரை மற்றும் தேனியைப் பின்னணியாகக் கொண்டு உருவாகி வரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு, ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டி மற்றும் ராஜமுந்திரியில் நடைபெற்றது.

இந்தப் படத்தில், தெலுங்கு வில்லன் நடிகரான ரவி அவானா வில்லனாக நடிக்கிறார். இந்தப் படத்தில் அஜித் ‘தூக்கு’ துரை என்ற கேரக்டரில் நடிப்பதாகக் கூறப்படுகிறது.

2019 ஆம் ஆண்டு பொங்கல் விடுமுறையில் இந்தப் படம் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்படத்தின் இரண்டாம் பார்வை அக்டோபர் 25 அன்று வெளியானது. அதில், பொங்கல் வெளியீட்டை உறுதிப்படுத்தியுள்ளது படக்குழு.

இரண்டாம்பார்வை வெளியானதிலிருந்து அதை வரவேற்றும் விமர்சித்தும் நிறைய கருத்துகள் பகிரப்பட்டுவருகின்றன.

இவற்றில், 96 படத்தில் இளம்வயது த்ரிஷா வேடத்தில் நடித்த புதுநடிகை கவுரிகிஷன் சொன்ன கருத்து வித்தியாசமாக இருக்கிறது.

அவர் தன் டிவிட்டரில், தல எப்போதும் தோற்பதில்லை, அவர் தன் படத்தின் மூலம் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியிருக்கிறார். அது, அனைவரும் இருசக்கர வாகனத்தில் பயணிக்கும்போது தலைக்கவசம் அணியுங்கள் என்பதுதான். எனவே அனைவரும் தலைக்கவசம் அணியுங்கள் என்று சொல்லியிருக்கிறார்.

Related Posts