சந்தானம் நடிக்கும் புதியபடம் – இயக்குநர் மற்றும் விவரங்கள்
நடிகர் சந்தானம் நடிப்பில் அண்மையில் குலுகுலு படம் வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.
இதற்கடுத்து அவர் நடித்துள்ள ஏஜெண்ட் கண்ணாயிரம் உள்ளிட்ட சில படங்கள் வெளியீட்டுக்குத் தயாராக இருக்கின்றன.
இவற்றிற்கடுத்து அவர் நடிக்கும் படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இல்லை.
அதேசமயம், அவர் நடிக்கும் அடுத்த படத்துக்கான வேலைகள் வேகமாக நடந்துகொண்டிருக்கிறதாம்.
பிரபல நிதியாளரும் விநியோகஸ்தருமான மதுரை அன்பு தயாரிப்பில் சந்தானம் நடிப்பதாக ஒப்புக்கொண்டிருந்தார்.
அந்தப்படத்துக்கான இயக்குநர் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களை இறுதிசெய்வதில் தாமதம் ஏற்பட்டுவந்தது.
அந்தப்படத்தை இயக்குவதற்காகப் பல இயக்குநர்களைத் தேடி கடைசியில் கண்டுபிடித்துவிட்டார்களாம்.
2015 இல் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான இந்தியா பாகிஸ்தான் படத்தை இயக்கிய என்.ஆனந்த், சந்தானம் நடிக்கும் புதிய படத்தை இயக்கவிருக்கிறாராம்.
அவர் சொன்ன கதை சந்தானம் மற்றும் தயாரிப்பாளர் அன்பு ஆகியோருக்குப் பிடித்துவிட்டதால் அவரை ஒப்பந்தம் செய்துவிட்டதாகச் சொல்லப்படுகிறது.
இயக்குநர் என்.ஆனந்த், சிவகார்த்திகேயன் தற்போது நடித்துவரும் பிரின்ஸ் படத்தின் வசனங்களை எழுதியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இயக்குநர் ஆனந்த்தின் தம்பி ஓம் இந்தப்படத்துக்கு ஒளிப்பதிவு செய்யவிருக்கிறார். நாயகி மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களை இறுதிசெய்யும் வேலைகள் தற்போது நடந்துவருகின்றனவாம்.
இப்படத்தின் படப்பிடிப்பு செப்டெம்பர் மாதத்தில் தொடங்கும் என்கிறார்கள்.











