September 30, 2026
Home Articles posted by cadmin (Page 130)
விமர்சனம்

வெப்பன் – திரைப்பட விமர்சனம்

மனித சக்திகளைத் தாண்டி பன்மடங்கு அதீத சக்தி கொண்ட கதாபாத்திரங்கள் ஆங்கிலப்படங்களில் அதிகம் இடம்பெறுகின்றன.அதுபோல் அதீத சக்தி கொண்ட ஒரு கதாபாத்திரத்தை உருவாக்கி அவரைச் சுற்றி பின்னப்பட்டிருக்கும் கதையைக் கொண்ட படம் வெப்பன். வெப்பன் என்கிற ஆங்கிலச் சொல்லுக்கு தமிழில் ஆயுதம் என்று
விமர்சனம்

அஞ்சாமை – திரைப்பட விமர்சனம்

சமுதாயத்தைப் பிரதியெடுத்தல் அல்லது பிரதிபலித்தல் தாம் கலைகள் என்பார்கள்.மருத்துவக் கனவோடு இருக்கும் இன்றைய இளைய சமுதாயத்தையும் அவர்தம் பெற்றோரையும் பிரதிபலித்திருக்கும் கலைப்படைப்பு தான் அஞ்சாமை. உலகிலேயே தலை சிறந்த மருத்துவர்களைக் கொண்ட இந்நாட்டில் மருத்துவப் படிப்புக்குத் தகுதித்தேர்வு அவசியம் என்கிற சட்டத்தையும் அதை நடைமுறைப்படுத்தும் இலட்சணங்களையும் நெற்றிப்பொட்டில்
செய்திக் குறிப்புகள்

பி.டி.சார் நன்றாக ஓடுகிறது – தயாரிப்பாளர் மகிழ்ச்சி

ஹிப் ஹாப் தமிழா ஆதி கதையின் நாயகனாக நடிக்க, இயக்குநர் கார்த்திக் வேணுகோபாலன் இயக்கத்தில், மே 24 ஆம் தேதி வெளியான திரைப்படம் பி.டி.சார்.இந்த படத்தில் ஹிப்ஹாப் தமிழா ஆதியுடன், காஷ்மிரா பர்தேசி, அனிகா, பாக்கியராஜ், பிரபு, தியாகராஜன், பாண்டியராஜ், திவ்யதர்ஷிணி, உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர். வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் டாக்டர் ஐசரி கே கணேஷ்
சினிமா செய்திகள்

புது இயக்குநரின் வாய்ப்பைத் தட்டிப் பறித்த சுந்தர்சி – விவரம்

சுந்தர் சி இயக்கி நடித்த அரண்மனை 4 படம் மே மாதம் 3 ஆம் தேதி வெளியானது. தமன்னா முதன்மை வேடத்தில் நடித்திருந்த அந்தப்படம் திரையரங்குகளில் பெரும் வசூலைப் பெற்றது. தமிழ்நாடு திரையரங்குகளில் மட்டும் சுமார் இருபத்தைந்து கோடி ரூபாயை தயாரிப்பாளரின் பங்காக வசூலித்துக் கொடுத்துள்ளது என்கிறார்கள். ஒரு படம் வெற்றி பெற்றால் மீண்டும் அந்தக் கூட்டணி இணைவது வழக்கம்தானே. அந்த வழக்கப்படி
சினிமா செய்திகள்

விஜய்சேதுபதி கேட்ட சம்பளம் – தள்ளிப் போனது தயாரிப்பாளர் ஆசை

விஜய்சேதுபதி இப்போது நித்திலன் சாமிநாதன் இயக்கியுள்ள மகாராஜா, ஆறுமுககுமார் இயக்கத்தில் ஏஸ், மிஷ்கின் இயக்கத்தில் டிரெய்ன் ஆகிய படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இவற்றில் மகாராஜா படம் ஜூன் 14 ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. முழுக்க முழுக்க மலேசியாவிலேயே நடைபெற்ற ஏஸ் படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்து அதற்குப் பிறகான வேலைகள் நடந்து வருகின்றன. டிரெய்ன் படத்தின்
செய்திக் குறிப்புகள்

விஜய்சேதுபதியின் மகாராஜா பட இயக்குநர் நித்திலன் நேர்காணல்

குரங்கு பொம்மை பட இயக்குநர் நித்திலன் சுவாமிநாதன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, மம்தா மோகன்தாஸ், இயக்குநர் பாரதிராஜா, பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப், அபிராமி, நட்டி, அருள்தாஸ், முனீஷ்காந்த், சிங்கம்புலி உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் மகாராஜா. ஃபேஷன் ஸ்டுடியோஸ் சார்பில் சுதன் சுந்தரம் தயாரித்திருக்கும் இப்படத்திற்கு ’காந்தாரா’ புகழ் அஜனீஸ் லோக்நாத் இசையமைத்துள்ளார்.
செய்திக் குறிப்புகள்

கண் கலங்கிய வாணிபோஜன் கதறி அழுத விதார்த்

பல்வேறு வெற்றி படங்களை தயாரித்த ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம், முழுமையாக ஒரு படத்தினை வாங்கி வெளியிடுகிறது. அப்படம் ‘அஞ்சாமை’. இதனை திருச்சித்ரம் சார்பில் டாக்டர் திருநாவுக்கரசு தயாரித்துள்ளார். மோகன் ராஜா, லிங்குசாமி உள்ளிட்டோரிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த எஸ்.பி.சுப்புராமன் இதனை இயக்கியுள்ளார். விதார்த், வாணி போஜன், ரகுமான், கிருத்திக் மோகன், பாலசந்திரன் ஐஏஎஸ்
சினிமா செய்திகள்

சில்லுனு ஒரு காதல் 2 – கவின் நடிக்கிறார்

சூர்யா,ஜோதிகா,பூமிகா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான படம் சில்லுனு ஒரு காதல்.2006 ஆம் ஆண்டு வெளியான இந்தப்படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரித்திருந்தது. அறிமுக இயக்குநர் கிருஷ்ணா இயக்கியிருந்தார். அப்படத்துக்குப் பிறகு நெடுஞ்சாலை, பத்துதல ஆகிய தமிழ்ப்படங்களையும் தெலுங்கில் ஒரு படத்தையும் இயக்கியிருந்தார் இயக்குநர் கிருஷ்ணா. இந்நிலையில்,தற்போது பிரின்ஸ் பிக்சர்ஸ்
விமர்சனம்

ஹிட் லிஸ்ட் – திரைப்பட விமர்சனம்

எந்த உயிரையும் கொல்லக்கூடாது எல்லா உயிர்களும் நமக்கு உறவுகளே. அவற்றைத் துன்புறுத்தக்கூடாது என்கிற வள்ளலார் வழியைத் தீவிரமாகக் கடைபிடித்து வரும் கதாநாயகன் விஜய்கனிஷ்காவுக்கு இரண்டு கொலை செய்தாக வேண்டும் என்கிற நெருக்கடி ஏற்படுகிறது.இவருக்கு ஏன் இந்த நெருக்கடி? நெருக்கடி கொடுப்பது யார்? அதன் பின் நடப்பவை என்ன? என்கிற கேள்விகளுக்கான விடைதான் ஹிட்லிஸ்ட். விஜய்கனிஷ்கா அறிமுக
விமர்சனம்

அக்காலி – திரைப்பட விமர்சனம்

அக்காலி என்பது பஞ்சாப் மாநிலத்தின் சில பகுதிகளில் பேசப்படும் வழக்குமொழி.இதற்கு இறப்பில்லாத மனிதன் என்று பொருள்.இந்தப் பெயரில் எடுக்கப்பட்டிருக்கும் படம் எப்படி இருக்கும் என்று நினைப்பீர்களோ அப்படியே அமைந்திருக்கிறது படம். சுடுகாடு,சாத்தான்,நரபலி என்று ஏகப்பட்ட அம்சங்களை மையமாக வைத்து ஒரு கிரைம் திரில்லர் படத்தைக் கொடுக்க முனைந்திருக்கிறார்கள். போதைப்பொருள் கடத்தலைத் தடுக்க