உணர்ச்சிகளைப் பட்டியலிட்டால் முதலில் அன்பு,பாசம் ஆகியனவும் அடுத்து கோபமும்தான் இடம்பெறும்.இந்த வரிசையை மையப்படுத்தி எழுதப்படும் கதைகள் பார்வையாளர்கள் மனதுக்கு மிக நெருக்கமாக அமையும் என்பது வெள்ளிடைமலை.இதை உணர்ந்து உருவாகியிருக்கும் படம்தான் கருடன். சசிகுமாரும் உன்னிமுகுந்தனும் நண்பர்கள்.
நடிகர் கவின் இப்போது நடன இயக்குநர் சதீஷ் இயக்கும் கிஸ், நெல்சன் தயாரிப்பில் பிளடி பெக்கர், வெற்றிமாறன் தயாரிப்பில் மாஸ்க் ஆகிய படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இவற்றில் கிஸ் மற்றும் பிளடி பெக்கர் ஆகிய படங்களின் படப்பிடிப்பு பெரும்பகுதி முடிவடைந்திருக்கிறது. இன்னும் சில நாட்கள் படப்பிடிப்பு நடந்தால் அவை நிறைவு பெற்றுவிடும் என்கிறார்கள்.மாஸ்க் படத்தின் படப்பிடிப்பு
விஜய் மில்டன் இயக்கத்தில் நடிகர்கள் விஜய் ஆண்டனி, சரத்குமார், சத்யராஜ் மற்றும் பலர் நடித்துள்ள படம் ‘மழை பிடிக்காத மனிதன்’. இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்சர் தயாரித்துள்ள இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. நிகழ்வில் தனஞ்செயன் பேசியதாவது….. இந்தப் படத்திற்கு வேறு சில டைட்டிலும் யோசித்தோம். ஆனால், ‘மழை பிடிக்காத மனிதன்’ என கவித்துவமாக இதுவே தான் வேண்டும் என
தெலுங்குத் திரையுலகின் முன்னணி நாயகர்களில் ஒருவரான பிரபாஸின் அடுத்த படம் ‘கல்கி 2898 AD’.அமிதாப் பச்சன், கமல்ஹாசன், பிரபாஸ், தீபிகா படுகோன், மற்றும் திஷா பதானி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இந்தப் படம், பிரபல இயக்குநர் நாக் அஸ்வின் இயக்கத்தில் சயின்ஸ் பிக்சன் படமாக உருவாகியுள்ளது. தெலுங்குத் திரையுலகின் முக்கிய திரைப்பட நிறுவனங்களில் ஒன்றான வைஜெயந்தி மூவிஸ்
சூரி கதாநாயகனாக நடித்து வெளியாகவிருக்கும் இரண்டாவது படம் கருடன்.இப்படத்துக்கு இயக்குநர் வெற்றிமாறன் கதை எழுதியிருக்கிறார்.இயக்குநர் ஆர்.எஸ்.துரை செந்தில்குமார் இயக்கியுள்ளார். இப்படத்தில் சூரியுடன் சசிகுமார், உன்னி முகுந்தன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் சமுத்திரக்கனி, ரேவதி சர்மா, ஷிவதா நாயர், மைம் கோபி, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலர்
ஜெயம்ரவி இப்போது எம்.ராஜேஷ் இயக்கத்தில் பிரதர்,புது இயக்குநர் அர்ஜுனன் ஜே.ஆர் இயக்கத்தில் ஜீனி, கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் காதலிக்க நேரமில்லை ஆகிய படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இவை தவிர மோகன்ராஜா இயக்கத்தில் தனிஒருவன் 2 படம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இப்போது ஒரு புதிய படத்தில் நடிக்கவிருக்கிறார் ஜெயம்ரவி. அந்தப்படத்தை இயக்குநர் பாண்டிராஜ்
நடிகர் கார்த்தியின் 48 ஆவது பிறந்தநாள் நேற்று. அதையொட்டி நடந்த மூன்று முக்கிய நிகழ்வுகள் நடந்தன.அவை பற்றிய செய்திக்குறிப்புகள். 1 நடிகர் கார்த்தி பிறந்தநாளுக்கு இரத்ததானம் செய்த இரசிகர்கள். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் கார்த்தி. இவருக்கு தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என ஏராளமான ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. இவர்கள் வெறும் இரசிகர்கள் மட்டுமில்லாமல் மாவட்டம்
2020 ஆம் ஆண்டு சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியானது ‘சூரரைப் போற்று’ திரைப்படம். அந்தப் படம் இரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. தேசிய விருதையும் வென்றது. அதையடுத்து இரண்டாவது முறையாக சூர்யாவும், சுதா கொங்கராவும் இணைவதாக கடந்தாண்டு அக்டோடர் மாதம் அறிவிக்கப்பட்டது. 2023 அக்டோபர் 26 ஆம் தேதி வெளியிட்ட அறிவிப்பில்… சூர்யாவின் திரையுலகப் பயணத்தில் அவரது
தலைப்பில் இருக்கும் பி டி சார் என்கிற ஆங்கிலப் பெயரின் தமிழாக்கம் உடற்பயிற்சி ஆசிரியர். இந்தப் படத்தில் நாயகன் ஹிப்ஹாப் ஆதி ஒரு பள்ளியில் உடற்பயிற்சி ஆசிரியராகப் பணியாற்றுகிறார்.எனவே படத்துக்கு இந்தப் பெயர். அவர் பணியாற்றும் கல்விக் குழுமத்தில் இருக்கும் கல்லூரி மாணவி தற்கொலை செய்துகொள்கிறார்.அவருடைய தற்கொலைக்கு என்ன காரணம்? என்பதை உணர்ந்து அது கொலை என்று வழக்குப் போகிறார்
ஒரு காலத்தில் கொடிகட்டிப் பறந்த ராமராஜன், ஒரு விபத்தில் சிக்கியதால் பல ஆண்டுகள் நடிக்காமல் இருந்தார்.14 ஆண்டுகளுக்குப் பின் அவர் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் சாமானியன். அஜீத்தின் துணிவு படம் போல எடுத்ததும் ஒரு வங்கிக்குள் நுழைந்து அங்குள்ளோரைச் சிறை பிடிக்கிறார் ராமராஜன்.வங்கியைக் கொள்ளையடிக்கப் போகிறார் என்று நினைக்கும்போது அப்படிச் செய்யாமல் மதுரையிலிருந்து மூன்று






















