சினிமா செய்திகள்

அஜீத் நடிக்கும் 62 ஆவது படம் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

போனிகபூர் தயாரிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் அஜீத் நடித்து அண்மையில் வெளியான படம் வலிமை. அப்படம் அவருடைய அறுபதாவது படம். வலிமை படத்துக்கு அடுத்து அஜீத் நடிக்கும் படத்தையும் எச்.வினோத்தே இயக்குகிறார் அந்தப்படத்தையும் போனிகபூரே தயாரிக்கிறார். அது அவருடைய அறுபத்தொன்றாவது படம்.

அப்படத்தின் படப்பிடிப்பே இன்னும் தொடங்கவில்லை. அதற்குள் அஜீத்தின் அறுபத்தியிரண்டாவது படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான லைகா புரொடக்சன்ஸ் நிறுவனம் அஜீத்தின் 62 ஆவது படத்தைத் தயாரிக்கிறது.

இதுதொடர்பாக அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்…

அஜீத்தின் 62 ஆவது படத்தை நாங்கள் தயாரிக்கிறோம் என்பதைப் பெருமையுடன் அறிவிக்கிறோம்.அந்தப்படத்தை விக்னேஷ்சிவன் இயக்குகிறார். அனிருத் இசையமைக்கிறார்.லைகா நிறுவனர் சுபாஸ்கரன் சார்பாக இப்படத்தின் தயாரிப்புப் பொறுப்பை ஜி.கே.எம்.தமிழ்க்குமரன் ஏற்றிருக்கிறார்.

இந்தப்படத்தின் படப்பிடிப்பு இவ்வாண்டு இறுதியில் தொடங்கும், அடுத்த ஆண்டு மத்தியில் படம் வெளியாகும். படத்தில் பங்குபெறும் மற்ற கலைஞர்கள் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்கள் விவரம் விரைவில் அறிவிக்கப்படும்.

அஜீத்தோடு இணைந்து பணியாற்றுவதில் லைகா நிறுவனம் மகிழ்ச்சி கொள்கிறது

இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பை அஜீத் இரசிகர்கள் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து வருகிறார்கள்.

Related Posts