ரஜினிக்கு வில்லனாக நடிக்கிறார் ஷங்கர்? – வியப்பூட்டும் விவரம்
கடந்த ஆண்டு நவம்பரில் ரஜினி நடிக்கவுள்ள 173 ஆவது படத்தின் இயக்குநர் சுந்தர்.சி என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அறிவிப்பு வெளியான ஒரு வாரத்தில் அவர் அப்படத்திலிருந்து வெளியேறுவதாக அறிவித்துவிட்டார்.அதன்பின் ரஜினி 173 படத்தின் இயக்குநர் யார்? என்ற எதிர்பார்ப்பு நிலவிவந்த நிலையில், அதனைத் தயாரிக்கும் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம்,‘ரஜினி 173’ படத்தை இயக்குநர் சிபி சக்ரவர்த்தி இயக்கவிருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
இந்த அறிவிப்பினை சனவரி 3,2026 அன்று காலை 11 மணியளவில் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டது.அதில்,டான் பட இயக்குநர் சிபி சக்ரவர்த்தி இயக்குநராக அறிவிக்கப்பட்டிருந்தார்.இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார் என்றும் சொல்லப்பட்டது.இப்படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் அல்லது மே மாதம் தொடங்கும் என்றும் சொன்னார்கள்.
ஆனால் ஏப்ரல் மாதத்தில் படப்பிடிப்பு தொடங்கவில்லை.மாறாக மறுபடியும் முதல்ல இருந்து என்பதுபோல் இயக்குநர் மாற்றம் இருக்கும் என்கிற தகவல் உலவிக்கொண்டிருக்கிறது.
இந்நிலையில், இன்னொரு சுவாரசிய தகவலும் இதற்குள் அடங்கியிருக்கிறது.
சிபிச் சக்ரவர்த்தி இயக்கத்தில் ரஜினி நடிப்பதற்கான வேலைகள் நடந்துகொண்டிருந்தன.அப்படத்தில் நாயகியாக நடிக்க ஷோபனா மற்றும் சிம்ரன் ஆகியோரிடம் பேச்சுவார்த்தைகள் நடந்துகொண்டிருந்தன.
அதோடு,அப்படத்தில் வில்லனாக நடிக்க இயக்குநர் ஷங்கரை நடிக்க வைக்கலாம் என்று சிபிச்சக்ரவர்த்தி சொன்னாராம்.அந்த வேடத்துக்கு அவர் மிகப் பொருத்தமாக இருப்பார் என்பது அவருடைய கருத்து.
இந்த யோசனையக் கேட்ட கமல் ரஜினி ஆகிய இருவருமே,நல்ல யோசனையாக இருக்கிறதே,அதைச் செயல்படுத்துங்கள் அவருடன் பேசுங்கள் என்று சொன்னார்களாம்.
அதுதொடர்பான வேலைகள் மிக இரகசியமாக நடந்துகொண்டிருந்ததாம்.ஷங்கரும் நடிக்கச் சம்மதம் என்று சொல்லிவிட்டாராம். அதேநேரம், சிபிச்சக்ரவர்த்தியின் கதையில் ரஜினி சொன்ன முக்கிய மாற்றத்தால் சிக்கல் வந்திருக்கிறது.அதுதொடர்பான பேச்சுகளின் போது ஒருகட்டத்தில் கடுங்கோபங்கொண்ட ரஜினி,சிபிச்சக்ரவர்த்தி கடுஞ்சொற்களைச் சொல்லிவிட்டதாகவும் சொல்லப்படுகிறது.
அதன்பின்னும் கதைதான் முக்கியம் என்று ரஜினியிடம் சமரசம் பேசி,மீண்டும் சிபிச்சக்ரவர்த்தியை கதை சொல்லப் பணித்திருக்கிறார்கள்.
இது ஒருபக்கம் இருக்கும்போதே,ரஜினி 173 படத்துக்காக இயக்குநர் அஸ்வத் மாரிமுத்துவையும் திரைக்கதை எழுதச் சொல்லியிருக்கிறார்கள்.
இரண்டில் எது இறுதியாகும் என்பது இன்னும் சில வாரங்களில் தெரியும்.
அஸ்வத்மாரிமுத்துதான் என்றாகிவிட்டால், இயக்குநர் ஷங்கர் நடிப்பது இல்லையென்றாகிவிடும்.
ஷங்கர் நடிகராக ஆசைப்பட்டுத்தான் திரைத்துறைக்கு வந்தார்.தொடக்கத்தில் சில படங்களில் நடித்துமிருக்கிறார்.இயக்குநராக அவர் பின்னடைவைச் சந்தித்திருக்கும் இவ்வேளையில் நடிகராகும் வாய்ப்பு அதுவும் ரஜினி படத்தில் வில்லன் வாய்ப்பு என்றால் அது அவருக்கு பெரிய திருப்புமுனையாக இருந்திருக்கும்.
அது இப்போது கேள்விக்குறியாகிவிட்டது.











