சினிமா செய்திகள் நடிகர்

துருவநட்சத்திரம் டீசரை பாராட்டிய அஜித் – படக்குழு மகிழ்ச்சி

கவுதம் மேனன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் `துருவ நட்சத்திரம்’. இதில் விக்ரம் நாயகனாகவும், ரிது வர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ் நாயகிகளாகவும் நடிக்கின்றனர்.

இவர்களுடன் பார்த்திபன், ராதிகா சரத்குமார், சிம்ரன், சுரேஷ் மேனன், வம்சி கிருஷ்ணா, சலீம் பெய்க், சதீஷ் கிருஷ்ணன், முன்னா சிமோன், மாயா எஸ்.கிருஷ்ணன், ஷ்ரவந்தி சாய்நாத், திவ்யதர்ஷினி உள்ளிட்ட பலரும் நடிக்கிறார்கள்.

ஒண்ராகா என்டர்டெயின்மெண்ட், எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன் மற்றும் லைகா புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரித்து வரும் இந்தப் படத்தின் டீசர் இன்று காலை வெளியிடப்பட்டது.

சில மணி நேரங்களிலேயே பத்து இலட்சம் பேர் இந்த டீசரை பார்த்திருக்கிறார்கள்.

இந்தப்படத்தின் டீசர் வெளியானவுடனே, ஐதராபாத்தில் நடந்துவரும் அஜீத்தின் விசுவாசம் படப்பிடிப்பில் உள்ள அனைவரும் இந்த டீசரை பார்த்திருக்கிறார்கள்.

அஜீத்தும் டீசரை பார்த்திருக்கிறார். ஏற்கெனவே அவர் கவுதம்மேனனோடு பணியாற்றியிருப்பதால், டீசர் வெளியானவுடனே பார்த்துவிட்டு குட் ஒன் என்று பாராட்டினாராம். இதனால் படக்குழுவினர் மகிழ்ச்சியில் இருக்கிறார்களாம்.

Related Posts