சாமி 2 ட்ரெய்லரை கிண்டல் செய்த கஸ்தூரி – கதறடித்த விக்ரம் ரசிகர்கள்
ஹரி இயக்கத்தில் விக்ரம்-திரிஷா உள்ளிட்ட பலர் நடிப்பில் 15 வருடங்களுக்கு முன்பு வெளியான படம்‘சாமி’.
இப்படத்தின் இரண்டாம் பாகம் இப்போது தயாராகி வருகிறது. இதில் விக்ரம்-கீர்த்தி சுரேஷ் ஜோடியாக நடிக்கின்றனர். ஹரி இயக்குகிறார்.
இந்தப் படத்தின் முன்னோட்டம் அண்மையில் வெளியாகி உள்ளது. இதில் காவல்துறை அதிகாரியாக வரும் விக்ரம் ஆவேசமாக பேசும் வசனங்கள் இடம் பெற்றுள்ளன.
இந்த முன்னோட்டத்தை நடிகை கஸ்தூரி டுவிட்டரில் கேலி செய்தார். “முந்தா நாள் வந்த டீஸரில் கலாய்த்திருந்த அத்தனை சீன்களையும் ஒன்று சேர்த்து ஒரு டிரெய்லர் ஸ்ஸப்பா..” என்று அவர் பதிவிட்டார்.
கஸ்தூரி முந்தா நாள் வந்த டீஸர் என்று குறிப்பிட்டது. சிவா நடித்துள்ள தமிழ் படம்-2 டிரெய்லரைத்தான். அதில் நிறையப் படங்களை கேலி செய்யும் காட்சிகள் இருந்தன. கஸ்தூரி அதில் கவர்ச்சி நடனம் ஆடி இருந்தார்.
சாமி-2 படத்தின் முன்னோட்டத்தை கஸ்தூரி விமர்சித்தது விக்ரம் ரசிகர்களுக்கு கோபத்தை ஏற்படுத்த “உன் பேரன் பேத்திகள் டி.வி. பார்க்கும் இந்த வயதில் நீ குத்தாட்டம் ஆடுறியே என்று பதிலடி கொடுத்தனர்.
இதனால் ஆத்திரமான கஸ்தூரி, “சொந்த பெண்ணை விட, சின்ன வயசு பொண்ணோடு டூயட் பாடுறதுதான் வயசுக்கேத்த நடிப்பா? அந்த அளவுக்கு எனக்கு நடிக்க வராது சாமி. ஏன்னா நான் பேய்க்கு பொறக்கல. பூதம் இல்லை. போடா மூடிட்டு” என்று ஆவேசமாக டுவிட்டரில் பாய்ந்தார்.
இதைத்தொடர்ந்து ஏராளமான விக்ரம் ரசிகர்கள் உள்ளே வந்து கஸ்தூரியை நாகரீகமாகவும் அநாகரீகமாகவும் விமர்சிக்கின்றனர்.
முதலில் அவற்றிற்குப் பதிலளித்துக் கொண்டிருந்த கஸ்தூரி ஒருகட்டத்தில் அமைதியாகிவிட்டார்.











