சினிமா செய்திகள் நடிகர்

உயிரிழந்தோர் வீட்டுக்கு நள்ளிரவில் சென்று ஆறுதல் சொன்ன விஜய்

தூத்துக்குடியில் அமைந்துள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த மே மாதம் 22ஆம் தேதி போராட்டம் நடைபெற்றது.

இந்த போராட்டத்தில் காவல்துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே கல்வீச்சு சம்பவம் நடைபெற்றது. இதனையடுத்து போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர். அவர்களுக்கு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நடிகர் ரஜினிகாந்த் ஏற்கனவே சந்தித்து ஆறுதல் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் நடிகர் விஜயும் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார்.

மேலும் அவர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாயும் நிதியுதவி வழங்கியுள்ளார். பகலில் சென்றால் ரசிகர்கள் அதிகளவில் கூடுவார்கள் என்பதால் நள்ளிரவு நேரத்தில் இருசக்கர வாகனத்தில் சென்று பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்தார் விஜய்.

இதனிடையே துப்ப‌க்கிச்சூட்டில் ‌காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை ‌இன்று சந்தித்து விஜய் நலம் விசாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Related Posts