சினிமா செய்திகள்

அருள்நிதி நடிக்கும் புதிய படம் – விவரங்கள்

அருள்நிதி நடிப்பில் லைகா நிறுவனம் தயாரித்துள்ள ஒரு படம் தயாராக இருக்கிறது. அதற்கடுத்து ராட்சசி பட இயக்குநர் கெளதம்ராஜ் இயக்கத்தில், அம்பேத்குமார் தயாரிப்பில் அருள்நிதி நடிக்கும் மூர்க்கன் மற்றும் அஜய்ஞானமுத்து இயக்கத்தில் டிமாண்டிகாலனி 2 ஆகிய படங்கள் தயாராகிக் கொண்டிருக்கின்றன.

இந்நிலையில், இப்போது இன்னொரு புதியபடத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார் அருள்நிதி.

ரோமியோ ஜூலியட், போகன், பூமி ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் இலட்சுமணனிடம் உதவியாளராகப் பணியாற்றிய விஜயரங்கன் என்பவர் இயக்கத்தில் ஒரு படம் நடிக்கவிருக்கிறார் அருள்நிதி.

விஜயரங்கன் சொன்ன கதை அருள்நிதிக்குப் பிடித்ததால் படவேலைகள் வேகம் பிடித்துள்ளன. இந்தப்படத்துக்கு ஹாரிஸ்ஜெயராஜ் இசை, டட்லி ஒளிப்பதிவு எனப் பெரிய அளவில் திட்டமிட்டு வேலை செய்துவருகிறார்களாம்.

இந்தப்படத்தை, மாநாடு படத்தைத் தமிழ்நாடு முழுதும் வெளியிட்ட கோவை சுப்பையா தயாரிக்கவிருக்கிறார்.

அவர் ஏற்கெனவே ஒரிரு படங்களைத் தயாரித்திருந்தாலும் இந்தப்படம் அவருக்கு திரைப்படத்தயாரிப்பாளர் என்கிற முழுமையான தகுதியை வழங்கக்கூடிய படமாக அமையும் என்கிறார்கள்.

இப்படத்துக்கான திரைக்கதையை இறுதிசெய்யும் பணிகள் இப்போது நடந்து கொண்டிருக்கின்றனவாம்.

தை பிறந்ததும் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று சொல்கிறார்கள்.

Related Posts