நூறு கோடியை நிராகரித்த சிம்பு – ஆச்சரிய தகவல்
சிம்பு இப்போது, கெளதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு மற்றும் கிருஷ்ணா இயக்கும் பத்துதல ஆகிய படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இவ்விரு படங்களின் படப்பிடிப்புகளும் இன்னும் சில நாட்கள் மட்டுமே பாக்கி இருப்பதாகச் சொல்லப்படுகிறது.
ஒன்றன்பின் ஒன்றாக இரண்டு படங்களுக்கும் தேதி கொடுத்திருக்கிறாராம் சிம்பு. மார்ச் மாதத்துக்குள் இவ்விரு படங்களின் படப்பிடிப்பும் மொத்தமாக நிறைவடைந்துவிடும் என்கிறார்கள்.
இவற்றிற்கடுத்து, ஐசரிகணேஷ் தயாரிப்பில் கோகுல் இயக்கத்தில் சிம்பு நடிக்கவிருக்கும் கொரோனா குமார் என்கிற படம் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்நிலையில், ஒரு பெரிய பன்னாட்டு நிறுவனத்தின் சார்பில் சிம்புவை அணுகி, எங்கள் நிறுவனத்தின் தயாரிப்பில் நீங்கள் தொடர்ந்து மூன்று படங்கள் நடிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்களாம்.
அதோடு, மூன்று படங்களுக்கான சம்பளம் நூறு கோடி, அதில் பாதியை இப்போதே முன்பணமாகத் தருகிறோம் என்றும் சொன்னார்களாம்.
நல்ல வாய்ப்பு வந்திருக்கிறது உடனே பணத்தை வாங்கிப் போடுவோம் என்று நினைக்காமல் அந்த கோரிக்கையை அடியோடு மறுத்துவிட்டாராம் சிம்பு.
நல்ல கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிப்பதே என் நோக்கம், பணத்துக்காகப் படங்களை ஒப்புக்கொள்ளமாட்டேன் என்று தனக்கு நெருக்கமானவர்களிடம் சொல்லியிருக்கிறாராம் சிம்பு.
இந்தத்தகவல் திரையுலகில் பரவி பலருக்கும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.










