சினிமா செய்திகள்

தயாரிப்பாளராகிறார் சிம்பு விக்ரம் விஜய்சேதுபதி படங்களின் இயக்குநர்

சிம்பு, ஹன்சிகா உள்ளிட்டோர் நடித்த வாலு, விக்ரம், தமன்னா உள்ளிட்டோர் நடித்த ஸ்கெட்ச், விஜய்சேதுபதி ராஷிகண்ணா உள்ளிட்டோர் நடித்த சங்கத்தமிழன் ஆகிய படங்களை இயக்கியவர் விஜய்சந்தர்.

அவர் இப்போது தயாரிப்பாளர் அவதாரம் எடுக்கிறார்.

படம் கிடைக்கவில்லை என்பதற்காக அவரே தயாரித்து இயக்குகிறாரா? என்று கேட்டால், இல்லையாம்.

நல்ல கதைகளைத் தேர்ந்தெடுத்து வேறு இயக்குநர்களை வைத்துத் தயாரிக்கவிருக்கிறாராம்.

அந்தவகையில் அவருடைய தயாரிப்பில் முதல்படம் உறுதியாகிவிட்டதாம்.

கதாநாயகியை மையமாகக் கொண்ட ஒரு கதை. ஹன்சிகா கதாநாயகியாக நடிக்கவிருக்கிறாராம்.

இப்படத்தை, இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமாரிடம் பல ஆண்டுகள் உதவி இயக்குநராகப் பணியாற்றிவிட்டு, கே.எஸ்.ரவிக்குமார் தயாரிப்பிலேயே தயாராகியிருக்கும் கூகுள் குட்டப்பா படத்தை இயக்கியுள்ள சரவணன் இயக்கவிருக்கிறாராம்.

இயக்குநர் சரவணன், இப்போது முழுமையான திரைக்கதை உருவாக்கும் பணியில் ஈடுபட்டிருக்கிறாராம். விரைவில் படப்பிடிப்பு தொடங்கவிருக்கிறது என்கிறார்கள்.

Related Posts