சினிமா செய்திகள்

கார்த்தியின் ஜப்பான் பட க்ளைமாக்ஸ் சர்ச்சை

நடிகர் கார்த்தியின் 25 ஆவது படம் ஜப்பான். ராஜுமுருகன் இயக்கும் அந்தப்படத்தை டிரீம்வாரியர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

கார்த்தி ஜோடியாக அனு இம்மானுவேல் நடிக்கிறார். தெலுங்கில் நகைச்சுவை நடிகராக அறிமுகமாகி, நாயகனாகவும் வெற்றி பெற்றவர் நடிகர் சுனில். கடந்த வருடம் அல்லு அர்ஜுன் நடித்து வெளிவந்த ‘புஷ்பா’ படத்தில் ‘மங்களம் சீனு’ என்ற கதாபாத்திரத்தில் வில்லனாகவும் நடித்து மிரட்டியவர். ‘ஜப்பான்’ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிப்பதன் மூலம் தமிழில் அறிமுகமாகிறார் சுனில்.

25 வருடங்களாகத் தமிழ்த் திரையுலகில் ஒளிப்பதிவாளராகவும், ‘கோலி சோடா’, ‘கடுகு’ ஆகிய திரைப்படங்கள் மூலம் இயக்குநராகவும், தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கியுள்ள விஜய் மில்டன், ‘ஜப்பான்’ திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

ஜிவி பிரகாஷ் குமார் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார்.ஒளிப்பதிவாளராக ரவிவர்மன் பணியாற்றுகிறார். பொன்னியின் செல்வன் படத்திற்கு பிறகு கார்த்தியுடன் மீண்டும் இணைகிறார்.

2022 நவம்பரில் தொடங்கிய இந்தப்படத்தின் படப்பிடிப்பு நிறைவுக்கட்டத்தில் இருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் இறுதிக்காட்சி அதாவது க்ளைமாக்ஸ் குறித்து கடும் விவாதம் நடந்துகொண்டிருக்கிறதாம்.

அதாவது படத்தின் இறுதியில் கார்த்தி இறந்துவிடுவது போல் காட்சி அமைக்கப்பட்டதாம். அப்படி அமைத்தால்தான் சரியாக இருக்கும் என்றும் அவ்வாறு செய்யக்கூடாது அப்படிச் செய்தால் மக்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என்றும் இரண்டு கருத்துகள் பேசப்பட்டுவருகிறதாம்.

இந்த விவாதம் முடிவடையாமல் தொடருவதால் படவேலைகள் தடைபட்டிருப்பதாகச் சொல்கிறார்கள்.

Related Posts