சினிமா செய்திகள்

பெட்ரோமாக்ஸ் வியாபாரம் – கடைசியில் நடந்ததென்ன?

ரோகின் வெங்கடேசன் இயக்கத்தில் தமன்னா முதன்மை வேடத்தில் நடித்திருக்கும் படம் பெட்ரோமாக்ஸ்.

ஒரு பேய் வீட்டை மையமாக வைத்து நகைச்சுவை ததும்ப எடுக்கப்பட்டிருக்கிறதாம்.

இந்தப்படத்தில் முனீஸ்காந்த், காளி வெங்கட், டிஎஸ்கே, சத்யன், யோகிபாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருப்பதால் படத்துக்கு எதிர்பார்ப்பு இருக்கிறது.

ஆனாலும் இந்தப்படத்தின் வியாபாரம் கடைசி நேரம் வரை சென்றிருக்கிறது.மினிமம் கியாரண்டி அடிப்படை வியாபாரம் அல்லது நேரடி வெளியீடு என்கிற முடிவில் தயாரிப்பு நிறுவனம் இருந்ததாம்.

கடைசியில் மினிமம் கியாரண்டி அடிப்படையில் தமிழகம் முழுக்க வெளியிடும் உரிமையை ராக்போர்ட் எண்டர்டெயின்மென்ட் டி.முருகானந்தம் பெற்றிருக்கிறாராம்.

சுமார் மூன்றே கால் கோடி கொடுத்து இப்படத்தை அவர் வங்கியிருப்பதாகச் சொல்லப்படுகிறது.

தமிழகம் முழுக்க வலிமையான விநியோகஸ்தர்களைக் கொண்டு படத்தை அவர் வெளியிடவிருப்பதால் படக்குழுவினர் பெரிதும் மகிழ்ச்சி அடைந்திருக்கின்றனராம்.

Related Posts